வாஸ்து: வீட்டின் பிரதான நுழைவாயில் எந்த திசையில் இருக்க வேண்டும்?

Vastu Tips
By Yashini Apr 17, 2024 12:30 AM GMT
Yashini

Yashini

Report

 வீட்டின் பிரதான நுழைவாயில் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

வீட்டின் பிரதான நுழைவாயில் பின்பக்க வாசலை நோக்கி எதிரெதிரே இருக்க கூடாது. ஏனெனில் வீட்டின் சக்தி பின்வாசல் வழியே வெளியேறும்.

வீட்டிற்குள் சுழன்று நல்ல பலன்களை தரும் நல்ல சக்தி வெளியேறுவது வீட்டிற்கும், வீட்டில் உள்ளவர்களுக்கு நல்லதல்ல.

வாஸ்து: வீட்டின் பிரதான நுழைவாயில் எந்த திசையில் இருக்க வேண்டும்? | Door Entrance Of The House Be According To Vastu

அதுபோல், வீட்டின் பிரதான வாசலுக்கு எதிரே மரமோ, கிணறோ இருக்க கூடாது, இதுவும் வீட்டின் உள்ளே நல்ல சக்தி நுழையாமல் தடுக்கும்.

வாசல் கதவுகள் உட்புறம் திறப்பது போல் அமையவேண்டும், வெளிப்புறம் திறப்பது போல் இருக்க கூடாது. குறிப்பாக கதவின் அகலம் கதவின் உயரத்தில் பாதியளவு இருக்கவேண்டும்.

அதோடு, மற்ற கதவுகளை விட பிரதான நுழைவாயில் கதவு மற்ற கதவுகளைவிட சற்று பெரிதாகவும், பளிச்சென்றும் இருப்பது மிகவும் நல்லது.

குறிப்பாக பிரதான நுழைவாயில் கதவுகளை திறக்கும்பொழுது எந்த சத்தம் அறவே வரக்கூடாது. ஏனெனில் அது வீட்டில் வசிப்பவர்களுக்கு கேடு விளைவிக்கும்.         

+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US