தொடங்கும் காரியம் வெற்றி பெற இந்த மந்திரத்தை சொல்லுங்கள்
வாழ்க்கை என்பது ஒரு இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் ஒரு பயணம் ஆகும். இந்த பயணத்தில் அனைவரும் எதிர்பார்ப்பது தமக்கு சாதகமான நிலையும், செய்யும் காரியங்களில் வெற்றியுமே.
ஆனால் வெற்றி என்பது அவ்வளவு எளிதாக ஒருவர் கைகளுக்கு கிடைப்பதில்லை. நீண்ட சோதனைகளுக்குப் பிறகே வெற்றி நம் வசமாகிறது. மேலும், வெற்றியோ தோல்வியோ செய்ய வேண்டிய காரியங்களையும் கடமைகளும் நாம் சரியாக செய்து விட வேண்டியது அவசியம் ஆகும்.
இருப்பினும் ஒரு விஷயத்தையும் ஒரு காரியத்தையும் நாம் செய்வதற்கு முன்னால் நமக்கு பல சூழலில் பயமும் பதட்டமும் வருவது இயல்பு தான். அந்த வகையில் மனதில் எடுத்த காரியம் வெற்றியை பெருமா என்று சிறு சந்தேகமும் இல்லாமல் எடுத்த காரியம் வெற்றி பெற துர்கா தேவியை சரணடைவது மிகச் சிறந்த பலனை பெற்றுக் கொடுக்கும்.
துர்கா தேவி வெற்றியின் அறிகுறியாக போற்றப்படுகிறாள். அவளைச் சரணடைந்து அவருடைய திலகத்தை நெற்றியில் வைத்து விட்டால் வெற்றியை நம் வசமாக்கிவிடலாம்.
அந்த வகையில் ஒரு காரியத்தை நோக்கி பயணம் செய்கிறீர்கள் என்றால் அந்தப் பயணத்திற்கு முன்பாக துர்கா தேவியின் இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து விட்டு தொடங்கினால் கட்டாயமாக நாம் செல்லும் காரியம் நல்ல முடிவை பெற்றுக் கொடுப்போம்
மந்திரங்கள்:
'ஜயத்வம் தேவி சாமுண்டே ஜயபூதாபஹாரிணி
ஜயஸ்ஸர்வகதே தேவி ஜயதுர்கே நமோஸ்துதே'
இந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்யலாம். இந்த மந்திரத்தை நாம் தொடர்ந்து பாராயணம் செய்து வழிபாடு செய்யும் பொழுது மனதில் உள்ள பயம் விலகுகிறது. எதையும் சாதிக்கும் துணிச்சல் துர்கா தேவியின் அருளால் நமக்கு கிடைக்கிறது.
ஆக துளியும் சந்தேகமில்லாமல் ஒரு விஷயத்தை இறங்கினால் மட்டுமே வெற்றி நம் வசமாகும். அந்த நம்பிக்கையோடும் சேர்த்து துர்கா தேவியின் அருள் நம் வசம் வைத்துக்கொண்டு போராடினால் எதையும் சாதிக்கும் சக்தி நமக்கு கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







