சந்திரன் - புதன் உருவாக்கும் துவித்வாதச யோகம் : இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்களும், அவை உருவாக்கும் யோகங்களும் மனிதர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
அந்த வகையில், ஜூன் 13ஆம் தேதி சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷபத்தில் நுழைகிறார்.அதே நேரத்தில், புதன் தனது சொந்த ராசியான மிதுனத்தில் இருப்பதால் அபூர்வமான துவித்வாதச யோகம் உருவாகிறது.

மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படும் இந்த யோகம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு தொழில், நிதி மற்றும் குடும்ப வாழ்க்கையில் சிறப்பான பலன்களை வழங்கும்.இந்த துவித்வாதச யோகத்தால் அதிர்ஷ்டம் பெறவுள்ள ராசிகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம்

துவித்வாதச யோகத்தின் தாக்கத்தால் ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலைமையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவேறும்.
இதன் மூலம் நல்ல லாபமும் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு அதிக வருமானத்தைத் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
செல்வம் அதிகரித்து, நிதி நிலைமை முன்பைவிட வலுவடையும். பணியாளர்களுக்கும் இந்த காலம் மிகவும் சாதகமாக இருக்கும். கடின உழைப்பிற்கான அங்கீகாரமும் பலனும் கிடைக்கும்.
சிம்மம்

துவித்வாதச யோகத்தின் பலனாக சிம்ம ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வருமானத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.
கடின உழைப்பிற்கான அங்கீகாரமும் உரிய பலனும் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் அமையும்.
பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். நிதி நிலையில் எப்போதும் இல்லாத அளவுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகளும் உருவாகும். குறிப்பாக மார்க்கெட்டிங், அரசியல் உள்ளிட்ட துறைகளில் இருப்பவர்கள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறுவார்கள்.
மீனம்

துவித்வாதச யோகத்தின் தாக்கத்தால் மீன ராசிக்காரர்களுக்கு புதிய சாதனைகளைப் படைக்கும் வாய்ப்புகள் உருவாகும்.
இந்த காலகட்டத்தில் தங்களின் முழுத் திறமையையும் வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கும். இதன் காரணமாக தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பணியாளர்கள் தங்களின் சிறப்பான செயல்திறன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கலாம். உடன்பிறந்தவர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புகள் தானாகவே அமையும்.