சமைக்கும் உணவில் அடிக்கடி முடி விழுகிறதா? இதை தெரிந்து கொள்ளுங்கள்
நம்முடைய ஜோதிடத்தில் வாஸ்து என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதாவது வீடுகளில் தொடங்கி தொழில் செய்யும் இடம் வரை வாஸ்து சரியாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் நாம் அந்த இடத்தில் நிம்மதியாக அமர்ந்து வேலை செய்ய முடியும்.
அப்படியாக, நம் வீடுகளில் நடக்கும் சில தீமைகளுக்கு வாஸ்துவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம். நமக்கு இறைவனின் அருள் இருந்தால், நமக்கு நடக்க இருக்கும் தீமை நன்மை பற்றி முன்பே அறிகுறி காண்பித்து விடும்.
அந்த வகையில் நாம் சமைக்கும் உணவுகளில் பெண்களின் தலை முடி விழுவது இயல்பு என்றாலும், அவை அடிக்கடி விழுவது அபசகுனமாக கருதப்படுகிறது. அவ்வாறு விழும் பொழுது நம்மை வாழ்க்கையில் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட சொல்கிறது என்று அர்த்தம்.
இவை நம் வீட்டில் நடக்க இருக்க கூடிய அபசகுனத்தை வெளிப்படுத்துவதாக சொல்லப்படுகிறது. மேலும், அவை பித்ரு தோஷத்தின் அறிகுறி என்றே சொல்லலாம். நம் வீட்டில் இறந்த நம் முன்னோர்களின் மகிழ்ச்சியின்மையை குறிக்கிறது.
அதோடு, நம் வீட்டில் கணவன் மனைவி இடையே பெரிய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகளாக கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு அடிக்கடி உணவில் முடி விழுவதை பார்க்கிறீர்கள் என்றால் நாம் செய்யவேண்டிய எளிய பரிகாரம் பற்றி பார்ப்போம்.
1. உணவில் முடி விழுவது பித்ரு தோஷத்தின் அறிகுறி என்பதால், உங்கள் வீட்டின் தெற்கு சுவரில் முன்னோர்களின் படங்களை தொங்கவிட்டு அதற்கு தினமும் பூ மாலை சாற்றி வழிபாடு செய்யவேண்டும்.
2. அதே போல் அவர்களின் நினைவு தினங்களில் பிராமணர்களுக்கு உணவு வழங்கி நன்கொடைகள் கொடுக்கலாம்.
3. அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்றி, பூக்கள், பச்சை அரிசி, பால், கங்கா ஜலம் மற்றும் கருப்பு எள் ஆகியவற்றை வழங்கி பிரார்த்தனை செய்யலாம்.
4. இரவு வீடுகளில் தெற்கு நோக்கிய விளக்கை ஏற்றி வைக்கலாம்.
5. மிக முக்கியமாக ஏழை பெண்கள் திருமணதிற்கு உதவி செய்தால் நமக்கு உண்டான எப்பேர்ப்பட்ட தோஷமும் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |