2026 புது வருடம் அதிர்ஷ்டமாக அமைய எளிய வாஸ்து குறிப்புகள்
2026 ஆம் ஆண்டு புது வருடம் இன்னும் ஒரு வாரத்தில் பிறக்க இருக்கிறது. இந்த புது வருடத்தை நோக்கி எல்லோரும் மிக ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
அதாவது நிச்சயம் அவர்கள் வாழ்க்கையில் புது வருடமானது ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்கும் என்ற ஒரு நம்பிக்கையோடு இருக்கின்ற வேளையில் இந்த புது வருடம் சிறப்பாகவும் தொட்ட காரியங்கள் வெற்றி பெறவும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையவும் நம் வீடுகளில் செய்ய வேண்டிய ஒரு எளிய வாஸ்து குறிப்புகளை பற்றி பார்ப்போம்.

வீடுகளில் நாம் பின்பற்றக்கூடிய ஆன்மீக விஷயங்கள் என்பது நிச்சயம் ஒரு மிகச் சிறந்த மாற்றத்தை வாழ்க்கையில் கொண்டு வந்து சேர்க்கும்.
அப்படியாக இந்த 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு ஒரு நல்ல தொடக்கமாக அமைய புத்தாண்டு அதிகாலை எழுந்து குளித்துவிட்டு உங்களுடைய வீட்டின் நுழைவாயிலில் ஒரு மண் அல்லது பித்தளை பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் உங்களால் முடிந்த மலர்களை போட்டு வைத்து விடுங்கள்.

இது உங்கள் வீட்டிற்கு ஒரு நல்ல அதிர்ஷ்டம் கொண்டு வந்து சேர்க்கும். காரணம் தண்ணீருக்கு தீய ஆற்றல்களை வெளியேற்றக் கூடிய தன்மை இருக்கிறது. ஆதலால் இதை நுழைவாயிலில் நாம் வைக்கும் பொழுது அதை கடந்து நம் வீட்டிற்குள் எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் நுழையாத வண்ணம் அது பார்த்துக் கொள்ளும். அது மட்டுமல்லாமல் புதிய விஷயங்களை நீங்கள் பின்பற்ற தொடங்குங்கள்.
அதாவது வீடுகளில் முடிந்த அளவிற்கு சுத்தமாக வைத்துக் கொள்ள பழகுங்கள். தினமும் இறைவழிபாடு மேற்கொள்ளுங்கள். இறைவனுடைய மந்திரத்தை பாராயணம் செய்த தொடங்குங்கள். இவ்வாறு செய்யும் பொழுது நிச்சயம் நல்ல மாற்றமும் பலனும் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |