எப்பேர்பட்ட கஷ்டங்களையும் போக்கும் ஏகாதசி மந்திரம்

By Sakthi Raj Aug 23, 2026 07:21 AM GMT
Report

 பெருமாளை வழிபடுவதற்கு எல்லா நாளும் உகந்த நாள் என்றாலும் ஏகாதசி திதி நாளில் பெருமாளை தரிசிப்பதும் பெருமாளின் திருநாமங்களை சொல்லி வழிபாடு செய்வதும் பெருமாளுக்கு உரிய மந்திரங்களை பாராயணம் செய்து வழிபாடு செய்வதும் நமக்கு மிகப்பெரிய அளவில் நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கும் என்பது ஐதீகம்.

அந்த வகையில், திதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விசேஷம் கொண்டது. சிவபெருமானுக்குரிய திதியாக திரயோதசி போற்றப்படுகிறது. அதேபோல், பெருமாளுக்கு உரிய திதியாக ஏகாதசி முக்கியத்துவம் பெறுகிறது.

அந்த வகையில், மாதம் தோறும் வருகின்ற ஏகாதசியில் விரதமிருந்து பெருமாளை வழிபாடு செய்பவர்களுக்கு எல்லா நலன்களும் கிடைக்கும். வளர்பிறை ஏகாதசி தேய்பிறை ஏகாதசி இரண்டுமே விசேஷமானது என்றாலும் வளர்பிறை ஏகாதசி இன்னும் சிறப்பு வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.

முற்பிறவி வாழ்க்கைத் துணையை சந்தித்து விட்டீர்கள் என்பதை உணர்த்தும் 7 அறிகுறிகள் என்ன?

முற்பிறவி வாழ்க்கைத் துணையை சந்தித்து விட்டீர்கள் என்பதை உணர்த்தும் 7 அறிகுறிகள் என்ன?

எப்பேர்பட்ட கஷ்டங்களையும் போக்கும் ஏகாதசி மந்திரம் | Ekadashi Mantras To Remove Suffering Troubles

இந்த நாளில் பெருமாளை வழிபாடு செய்வதும் ஸ்ரீமன் நாராயணனுடைய மந்திரங்களை பாராயணம் செய்வதும் நமக்கு வாழ்க்கையில் உள்ள மிகப்பெரிய துயரங்களில் இருந்து விடுதலை பெற்றுக் கொடுக்கிறது. அப்படியாக, வாழ்க்கையில் எப்பேர்பட்ட கஷ்டமாக இருந்தாலும் அதிலிருந்து விடுபடுவதற்கு ஏகாதசி அன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள் பற்றி பார்ப்போம்.

ஓம் கேசவாய நமஹ :
ஓம் சங்கர்ஷனாய நமஹ :
ஓம் நாராயணாய. நமஹ :
ஓம் வாசுதேவாய. நமஹ :
ஓம் மாதவாய. நமஹ ஓம் ப்ரத்யும்னாய. நமஹ :
ஓம் கோவிந்தாய. நமஹ :
ஓம் அனிருத்தாய. நமஹ :
ஓம் விஷ்ணவே நமஹ ஓம் புருஷோத்தமாய.நமஹ:
ஓம் மதுசூதனாய. நமஹ :
ஓம் அதோக்ஷஜாய. நமஹ :
ஓம் த்ரிவிக்ரமாய. நமஹ :
ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய. நமஹ :
ஓம் வாமனாய. நமஹ :
ஓம் அச்சுதாய. நமஹ :
ஓம் ஸ்ரீதராய. நமஹ :
ஓம் ஜனார்தனாய நமஹ :
ஓம் ஹ்ரிஷீகேசாய. நமஹ :
ஓம் உபேந்த்ராய. நமஹ :
ஓம் பத்மநாபாய. நமஹ :
ஓம் ஹரயே நமஹ :
ஓம் தாமோதராய. நமஹ :
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ

12 ராசிகளின் தனி சிறப்புகள் என்ன ? இந்த குணம் தான் எல்லோரையும் கவரக்கூடியதாம்

12 ராசிகளின் தனி சிறப்புகள் என்ன ? இந்த குணம் தான் எல்லோரையும் கவரக்கூடியதாம்

இந்த மந்திரங்களை பெருமாளின் திருவுருவப்படத்திற்கு முன்பாக துளசி மாலை சமர்ப்பித்து பாராயணம் செய்கின்ற பொழுது நாம் வேண்டிய வரன்களை வெங்கடேசன் அருளி செய்வார்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US