அதிர்ஷ்டம் பெறுக வீட்டில் இந்த படத்தை வாங்கி வையுங்கள்
வீடு இடம் இவை எல்லாம் நம்முடைய கிரக அமைப்புகளுடன் சமந்த பட்டது.அப்படியாக நம் வீட்டில் சில விஷயம் இருக்கிறது என்றால் நன்மையையும் சில விஷயங்களும் இருந்தால் சில தீமைகளும் நடக்க வாய்ப்பு இருக்கிறது.
அப்படியாக வீட்டில் வலது காலை தூக்கி யானை படம் இருந்தால் நன்மைகளை உண்டாகும்.அதை பற்றி பார்ப்போம்.
யானை வலது காலை தூக்கி வைத்தார் போல் போட்டோ எங்கேயாவது கிடைத்தால் வாங்கி வந்து உங்கள் வீட்டை பார்த்தவாறு அல்லது வீட்டு வாசலை பார்த்தவாறு மாட்டி வைத்து கொள்ள வேண்டும்.
அப்படி செய்தால் வீட்டுக்கு ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டத்தை உண்டாக்கும் என்பது ஐதீகம்.மேலும் அந்த படத்தை வீட்டில் மாட்ட செல்வ வளம் கூடும். சில பேர் எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணம் தங்குவதில்லை என்று என்று சொல்வதுண்டு.
அவர்கள் வீட்டில் யானை வலது கால் தூக்கி வைப்பது போல் மாட்டினால் காசு பணம் கையில் தங்கும். சில நேரங்களில் குடும்பத்தில் இனம் புரியாத ஒரு குழப்பம் கொண்டு வந்து கொண்டே இருக்கும்.அவர்களும் வீட்டைப் பார்த்தவாறு மாட்டினால் அதிர்ஷ்டம் உண்டாகும்
அதுவே வீட்டு வாசலை பார்த்தவாறு மாட்டினால் உங்கள் எதிரிகள் தீய சக்திகள் கண் திருஷ்டிகள் அண்டவே அண்டாது முக்கியமாக யானை வலது காலை தூக்கி உள்ள படம் மட்டுமே மாட்ட வேண்டும்.
இடது காலை தூக்கி உள்ள படத்தை மாட்டக்கூடாது. யானையின் வலது கால் வளர்ச்சியை குறிக்கும்.
யானை இடது கால் அழிவை குறிக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |