எதிரிகளை வீழ்த்த வெற்றிலை பரிகாரம்
சிலருக்கு எதிரிகள் தொல்லை பயங்கரமா இருக்கும்.அதிலும் நேர் வழியில் செல்வபவர்களுக்கு தான் எதிரியின் தொல்லை இன்னும் அதிகமாக இருக்கும்.
அவர்கள் என்னதான் நேர் வழியில் சென்று முயற்சி செய்து வெற்றி அடையவேண்டும் என்று நினைத்தாலும் அவர்களுக்கு இறைவன் துணை வேண்டும்.
வினை தீர்ப்பவர் விநாயகர்.எந்த பிரச்சனையாக இருந்தாலும் நாம் முதலில் வழிபட வேண்டிய தெய்வம் விநாயகர்.பொதுவாக ஒரு பேப்பரில் நம்முடைய கஷ்டங்களை எழுதி பின்னி சுவாமிக்கு மாலையாக போடுவதுண்டு.
அதேபோல் நம் எதிரிகளை வீழ்த்த நாம் ஒரு வெற்றிலையை எடுத்துக்கொண்டு அதில் நம் மனதில் நினைப்பதை எழுதி பிள்ளையார் முன் வைத்து விட வேண்டும்.
மரத்தடி பிள்ளையார் ஆக இருந்தால் மிகவும் நல்லது.மேலும் எல்லா கோவில்களிலும் நாம் முதலில் பிள்ளையாரை வணங்கிய பின் தான் அனைத்து தெய்வங்களையும் வணங்க செல்வோம்.
ஆதலால் அனைத்து கோவில்களிலும் பிள்ளையார் தான் முதல் இடத்தில் வகிப்பார்.
அப்படியாக நாம் விநாயகர் முன் வெற்றிலையில் நம் மனதில் என்ன நினைகின்றமோ அதை எழுதி வைத்துவிட்டு கோவிலுக்குள் சென்று நம் சுவாமியை தரிசித்து வர நம் எதிரிகள் தொல்லை படிப்படியாக குறைந்து நம் வாழ்க்கையில் முன்னேற்றமும் வெற்றியும் அடையலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |