சென்னையில் வசிப்பவர்கள் கட்டாயம் ஆடி மாதத்தில் இந்த கோயில்களுக்கு செல்ல தவறாதீர்கள்
நம்முடைய இந்து மதத்தில் ஆடி மாதம் என்பது மிகவும் விஷேசம் நிறைந்த மாதம் ஆகும். அதிலும் குறிப்பாக அம்மன் வழிபாட்டிற்கு உரிய அற்புதமான மாதம் ஆகும். அந்த வகையில் தமிழ்நாட்டின் தலை நகரமான சென்னையில் ஆடி மாதத்தில் நாம் வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான அம்மன் கோயில்களை பற்றி பார்ப்போம்.
1.மாங்காடு காமாட்சியம்மன் கோயில்:
இக்கோயிலில் அம்மன் பரமேஸ்வரனை மணம் முடிந்து கொள்ள தியானத்தில் அமர்ந்த தபசு ஸ்தலமாகும். இக்கோயிலில் மூலவராக அருள் பாலிக்கும் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக இருக்கிறாள். இங்கு திருமண தடைகள், குடும்ப அமைதி வேண்டி பலரும் இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். அதிலும், குறிப்பாக ஆடி மாதத்தில் ஆடி வெள்ளி, ஆடி திங்கள் நாட்களில் இக்கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது மிக சிறந்த பலனைக்கொடுக்கும்.
2. முண்டகக்கண்ணி அம்மன் கோயில்:
இக்கோயிலில் அம்மன் சுயம்பு வடிவில் தோன்றி மிக எளிய வடிவில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றாள். இந்த அம்மன் மயிலாப்பூரில் காவல் தெய்வமாக வழிபாடு செய்யப்பட்டு, நாளடைவில் முண்டகக்கண்ணி அம்மன் என்ற பெயர் பெற்றதாக சொல்கிறார்கள்.
இங்கு ஒருவருக்கு ஏற்பட்ட அம்மை நோய் விலகவும், திருமணத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பக்தர்கள் வந்து வேண்டுதல் வைக்கின்றனர். மேலும், இங்கு அம்மன் வேண்டிய வரங்களை அவ்வாறே அருள்வதால் பல இடங்களில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இங்கு ஆடி மாதத்தில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் விசேஷ ஹோமங்கள், பூச்சூட்டல், தீபாராதனைகள் நடைபெறும். இதில் கலந்துக்கொண்டால் குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் விலகி அமைதி உண்டாகிறது.
3. திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில்:
ஞான சக்தியின் உருவமாக திகழும் வடிவுடை அம்மன் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளிக் கொடுக்கிறாள். இங்கு அம்மன் குருவாக கருத்தப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறாள். அப்படியாக, ஆடி மாதத்தில் இங்கு நடைபெறும் பொதுப் பூஜைகள், பல்லக்கு சேவை, தீர்த்த உற்சவம் அனைத்திலும் கலந்துக் கொண்டால் நாம் மகத்தான பலனைப் பெறலாம்.
4. காளிகாம்பாள் அம்மன் கோயில் :
சென்னையின் மிக முக்கியமான அம்மன் ஆலயங்களில் காளிகாம்பாள் கோயிலும் ஒன்று. மேலும், ஒருவருக்கு ஏற்பட்ட தீர்த்த சிக்கல்கள் விலகவும், வாழ்க்கையில் வெற்றி அடையவும் இங்கு வந்து அம்மனை வழிபாடு செய்வது நமக்கு மிக சிறந்த பலன் அளிக்கிறது.
மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில், பணியாற்றிக் கொண்டிருந்தபோது பிராட்வேயில் தங்கியிருந்தார். இந்த கோவிலை அடிக்கடி அவர் வழிபட்டு வந்தனால் . ‘‘யாதுமாகி நின்றாய் காளி’’ என்ற பாடலை காளிகாம்பாளை குறிக்கும் விதமாக எழுதியுள்ளார்.
மேலும், இங்கு ஆடி மாதத்தில் ஆடி வெள்ளிக்கிழமையில் காளியின் வலிமைபாடும், சக்திப் பாசுரங்கள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொண்டால் நாம் அன்னையின் பரிபூர்ண அருளைப் பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







