இன்றைய ராசி பலன்(01.02.2025)
மேஷம்:
இன்று நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்காமல் போகலாம்.உங்கள் வாழ்க்கை ரகசியத்தை பிறரிடம் பகீராதீர்கள்.வியாபாரத்தில் உங்களுக்கான லாபம் கிடைக்க தாமதம் ஆகலாம்.யோசித்து செயல்படவேண்டிய நாள்.
ரிஷபம்:
நேற்று வரை தாமதம் ஆன செயல் ஒன்று நல்ல முடிவிற்கு வரும்.குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.நண்பர்களை சந்திப்பதால் உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுனம்:
வேலையில் சில பாதிப்புகள் உண்டாகலாம்.மூன்றாம் நபர் பேச்சை கேட்டு தவறு செய்யாதீர்கள்.எந்த சூழலிலும் உண்மை பேசி பழகுங்கள்.தேவை இல்லாத பொய் சொல்வதால் வீண் பிரச்சனைகள் உருவாகலாம்.
கடகம்:
பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் நெருக்கடி உண்டாகும்.ஆவலுடன் மேற்கொண்ட வேலை இழுபறியாகும்.பூசம்: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும்.
சிம்மம்:
வியாபாரத்தில் உங்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் எல்லாம் படிப்படியாக குறையும்.வாங்கிய கடனை அடைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.குடும்பத்தில் உண்டான கவலைகள் தீரும்.
கன்னி:
தடைகளைத்தாண்டி வெற்றி பெறுவீர். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும். வரவேண்டிய பணம் வரும். பணிபுரியும் இடத்தில் மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும்.
துலாம்:
பூர்விக சொத்தில் உண்டான பிரச்சனைகள் முற்றிலுமாக விலகும்.உங்கள் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறும்.குடும்பத்தை அனுசரித்து செல்வது நல்லது.மனதில் உண்டான குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம்.
விருச்சிகம்:
வேலைபளு அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும்.பணிபுரியும் இடத்தில் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரும். சிறுவியாபாரிகள் பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.
தனுசு:
உங்கள் மனதில் உண்டான வலி முற்றிலுமாக குறையும்.உங்கள் செல்வாக்கு உயரும்.வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும்.நீண்ட நாள் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
மகரம்:
கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும். வெளியூர் பயணத்தால் லாபம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த தடை விலகும். பழைய முதலீடு தொழிலுக்கு கை கொடுக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.
கும்பம்:
குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். மனதில் தெளிவு உண்டாகும்.குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது.பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.
மீனம்:
நீங்கள் மனதில் நினைப்பது ஒன்று நடப்பது வேறாக இருக்கும்.செய்யும் செயல்களில் நிதானம் தேவை.குலதெய்வ வழிபாடு நன்மையை தரும்.எதிர்பார்த்த இடங்களில் இருந்து நன்மை கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |