வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெற தனுசு ராசியினர் வழிபாடு செய்யவேண்டிய சிவன் கோவில்
12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய முக்கியமான வழிபாட்டு ஆலயங்கள் உள்ளது. அப்படியாக தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கடுவெளியில் அமைந்துள்ள ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில், தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்திற்குரிய சிறப்பு வாய்ந்த ஆலயம் ஆக இருக்கிறது.
கடுவெளி சித்தர் அவதரித்த இந்த தலத்தில் சுமார் 3000 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் ஆகாசபுரீஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை அருள்பாலிக்கின்றனர். மேலும் கடுவெளி சித்தர் அவதரித்த ஆலயம் தான் இந்த கடுவெளி கோயில்.
பொதுவாகவே, சித்தர்கள் தான் உணர்ந்த ஞானத்தை தனக்கு மட்டுமல்லாமல் உலக மக்களுக்கு எடுத்துச் சென்று அவர்களுடைய அறியாமை நீக்க வேண்டும் என்று உணர்வார்கள். அதை போல், தான் கடுகளி சித்தரும் தான் உணர்ந்ததை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று உபதேசம் செய்தார்.

இதனால் இவருக்கு கடுவெளி சித்தர் என்ற பெயர் வந்தது. மேலும் இங்கு தங்கி இருந்த சித்தர் சிவபெருமானுடைய அருள் வேண்டியும், தரிசனம் வேண்டியும் கடும் தவம் புரிந்தார். சிவபெருமானும் கடுவெளி சித்தரின் கடும் தவத்தினால் மனம் மகிழ்ந்து அவருக்கு காட்சி கொடுத்தார், சித்துக்கள் வல்லமை பெறும்படி அருள் புரிந்தார்.
பிற்காலத்தில் இந்த பகுதியை ஆண்ட சோழ மன்னன் ஒருவர் சித்தருக்கு அருளிய சிவன் கோவில் ஒன்றை எழுப்பினார். இவர் பஞ்சபூதங்களில் ஆகாயத்திற்கு அதிபதியாக திகழ்வதால் ஆகாசபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

தலமும் சித்தர் பெயரால் கடுவெளி என்று அழைக்கப்பட்டது. இங்கு சுவாமி ஆகாசபுரீஸ்வரர் பூராட நட்சத்திரத்திற்கு அதிபதியாக இருக்கிறார். ஆகாச வெளியில் உள்ள அனைத்து தேவதைகளும், வாஸ்து பகவானும் பூராட நட்சத்திர நாளில் ஆகாச புரீஸ்வரரை வழிபாடு செய்வதாக ஐதீகம்.
அதனால் இந்த நட்சத்திரம் மட்டுமல்லாமல் தனுசு ராசியை சேர்ந்த அத்தனை நபர்களும் தங்களது நட்சத்திர நாளில் இந்த தலத்திற்கு வந்து சிவபெருமானுக்கு புனுகு, ஜவ்வாது சாற்றி நெய்வேத்தியம் செய்து வணங்கினால் வாழ்க்கை சிறப்பாக அமையும். அதேபோல் திருமண தடை விலகி அதிர்ஷ்டம் தேடி வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |