அருணகிரிநாதர் வரலாறு: திருப்புகழ் பாடியவர் ஒரு காலத்தில் இவ்வளவு மோசமானவரா?

By Sakthi Raj Mar 05, 2026 05:47 AM GMT
Report

 அருணகிரிநாதர் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகவும் புகழ்பெற்ற தமிழ் புலவர் மட்டுமல்லாது முருகப்பெருமானின் தீவிர பக்தர் ஆவார். இன்னும் சொல்லப்போனால் இன்றைய காலம் கட்டம் வரை முருகப்பெருமானையும் அருணகிரிநாதரையும் நாம் பிரித்து பார்க்க முடியாது. முருகப் பெருமான் என்கின்ற போதெல்லாம் அருணகிரிநாதரின் பெயர் நம் நினைவுக்கு வருகிறது.

அந்த அளவிற்கு முருகப் பெருமானின் மீது அளவுகடந்த பக்தியும் முருகப்பெருமானை போற்றி திருப்புகழும் பாடி மிகவும் புகழ் பெற்றவர். மேலும், நமக்கு அருணகிரிநாதர் ஒரு சிறந்த புலவர், முருக பக்தர் என்று தான் தெரியும்.

ஆனால் அவர் என்னென்ன தவறுகள் செய்து உயர்ந்த நிலைமைக்கு வந்தார் என்ற வரலாறு நமக்கு தெரிவதில்லை. அதை பற்றி பார்ப்போம். கிபி 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலை பிறந்தவர் அருணகிரிநாதர். பிறவியிலே கல்வி, ஞானம், அறிவு, கவி பாடும் திறனை பெற்றவர்.

எத்தனை திறமைகள் இருந்தாலும் காலத்தினால் திசை தடுமாறிய நேரமும் உண்டு அவர் வாழ்க்கையில் உண்டு. அதாவது, காமத்தினாலும் சிற்றின்பத்தினாலும் அவர் மூழ்கிப் போனார். தனது சொத்துக்கள் எல்லாவற்றையும் விலை மாதர்களுக்காக இழந்து நின்றார்.கையில் இருந்த செல்வம் தீர்ந்தும் அவருடைய மோகம் தீரவில்லை.

அருணகிரிநாதர் வரலாறு: திருப்புகழ் பாடியவர் ஒரு காலத்தில் இவ்வளவு மோசமானவரா? | Lord Murugan Devotee Arunagirinathar History

மகாபாரதம்: வாழ்க்கையில் வெற்றி பெற அர்ஜுனனிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை

மகாபாரதம்: வாழ்க்கையில் வெற்றி பெற அர்ஜுனனிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை

இப்படியாக வாழ்க்கை செல்ல தவறான பழக்க வழக்கங்களால் அவருக்கு குஷ்டம் என்கின்ற கொடிய நோய் தாக்கியது. மிகவும் அழகிய உருவத்தை கொண்ட அவருடைய உருவம் குலைந்து உடல் நாற்றம் எடுத்தது. சுற்றத்தார் எல்லாம் அவரை வெறுத்து ஒதுக்கினர்.

காலம் துன்பத்தின் எல்லையில் கொண்டு விட்டாலும் அவருடைய பழக்கங்களை அவரால் கை விட முடியவில்லை. அப்படியாக ஒரு முறை அவரிடம் பணம் இல்லாத போது தனது சகோதரரிடம் சென்று பொருள் கேட்கிறார்.

தன்னுடைய அண்ணனின் நிலையை கண்டு வருந்திய சகோதரி பொருளெல்லாம் தீர்ந்து போனது இன்னும் உனக்கு மோகம் தீரவில்லையா? என் உடலை வேண்டுமானால் விற்று உன் ஆசையை தீர்த்துக் கொள் என்று ஆவேசத்துடன் சொன்னார். சகோதரி சொன்ன வார்த்தைகள் அருணகிரிநாதரின் இதயத்தை துளைத்தது.

அன்றைய நொடி பொழுது தான் அவருடைய கீழ்த்தரமான நிலையை எண்ணி தலை குனிந்தார். இனிமேல் இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வதை விடவும் மரணத்தை அடைவதே மேல் என்று முடிவு செய்து மனமுடைந்த அருணகிரிநாதர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் வல்லாள கோபுரத்தின் மீது ஏறி கீழே குதித்து தன் உடைய உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பினார்.

அருணகிரிநாதர் வரலாறு: திருப்புகழ் பாடியவர் ஒரு காலத்தில் இவ்வளவு மோசமானவரா? | Lord Murugan Devotee Arunagirinathar History

கருட புராணம்: அகால மரணம் அடைந்தவர்களின் ஆன்மா எங்கே செல்லும்?

கருட புராணம்: அகால மரணம் அடைந்தவர்களின் ஆன்மா எங்கே செல்லும்?

ஆனால் அவர் குதித்த அதன் நொடியில் ஒரு முதியவர் வடிவில் வந்த முருகப்பெருமான் அவருடைய இரு கரங்களால் அவரை தாங்கி பிடித்தார். "நில் அருணகிரி" என்று அழைத்து அவரின் உடலில் இருக்கக்கூடிய பிணிகளை நீக்கி ஒரு ஞானியாக மாற்றினார். முருகப்பெருமான் அவருக்கு ஜெபமாலை அளித்து நாவில் வேல் கொண்டு அட்சரம் எழுதி ஞானத்தை அருளினார். முருகப்பெருமான் 'என்னை பற்றி பாடு' என்று சொல்ல, திகைத்து நின்றார் அருணகிரிநாதர்.

பிறகே முருகப்பெருமானே 'முத்தைத்தரு" என்று அடியெடுத்து கொடுக்க அருணகிரிநாதர் நாவிலிருந்து திருப்புகழ் அருவியாக கொட்டியது. அன்றைய நொடி பொழுது வரை சிற்றின்பத்தை மட்டுமே நாடி சென்ற அவருடைய ஆன்மா இறைவனின் அருளால் பேரின்பத்தை பாடத் தொடங்கியது.

திருவண்ணாமலையில் இருந்து பல திருத்தலங்களுக்கு சென்று முருகப்பெருமானை தரிசித்து ஆயிரக்கணக்கான பாடல்களை பாடினார். இவரது பாடல்கள் சந்தம் தமிழ் என்று அழைக்கப்படுகின்றன.

மேலும் கடினமான தாள அமைப்புகளையும் இவர் எளிதாக கையாண்டார். மேலும், சக ஒரு மனிதன் ஒருவர் உயர்ந்த நிலைக்கு செல்கிறார்கள் என்றால் சக மனிதர்களால் சில நேரங்களில் பொறுத்துக்கொள்ள முடியாது.

அதேபோல் அருணகிரிநாதரின் புகழ் பரவுவதை பார்த்த என்ற 'சம்பந்தாண்டான்'மந்திரவாதி மன்னர் பிரபுட தேவராயனிடம் அருணகிரிநாதரை பற்றி தேவையில்லாத விஷயங்களை கோள் மூட்டினான். மன்னன் முன்னிலையில்" நீ சிறந்த முருக பக்தன், முருகனால் உனக்கு ஞானம் கிடைத்தது உண்மை என்றால் முருகப்பெருமானை நேரில் வரவழைக்க சவால் விடுத்தான். அருணகிரிநாதர் பக்தியுடன் முருகப்பெருமானை வேண்ட தேவர்கள் சபையில் முருகப்பெருமான் மயில்மீது வந்து காட்சி கொடுத்துஅனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

அருணகிரிநாதர் வரலாறு: திருப்புகழ் பாடியவர் ஒரு காலத்தில் இவ்வளவு மோசமானவரா? | Lord Murugan Devotee Arunagirinathar History

பகவத் கீதை: இந்த குணம் கொண்ட மனிதனை எவராலும் நெருங்க முடியாதாம்

பகவத் கீதை: இந்த குணம் கொண்ட மனிதனை எவராலும் நெருங்க முடியாதாம்

அந்த நேரத்திலும் சம்பந்தாண்டான் சூழ்ச்சி செய்வதை நிறுத்தவில்லை மன்னனுக்கு கண் பார்வை கிடைக்க "பாரிஜாத மலர்" வேண்டும் என்றும் அதை அருணகிரிநாதரால் மட்டுமே கொண்டுவர முடியும் என்று கூறினார்.

தனது உடலை ஒரு கோபுரத்தின் மறைவான இடத்தில் அருணகிரிநாதர் விட்டு கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையினால் ஒரு கிளியின் உடலில் புகுந்து தேவ லோகம் சென்றார். அவர் சென்ற பின் அவரது உடலை சம்பந்தாண்டான் எரித்துவிட்டான். திரும்பி வந்த அருணகிரிநாதர் உடல் இல்லாததால் கிளி உருவத்திலேயே திருவண்ணாமலையில் கோபுரத்தில் அமர்ந்து "கந்தர் அனுபூதி" என்னும் உன்னதமான தத்துவ நூலை நமக்கு கொடுத்திருக்கிறார்.

ஆக மனிதர்கள் வாழ்க்கையில் சில நேரங்களில் தவறுகளை செய்து தான் நமக்கு ஞானம் பிறக்க வேண்டும் என்ற ஒரு நியதி இருக்கிறது. ஆனால் செய்த தவறை மனதாக திருத்திக் கொள்ளும் பொழுது இறைவனுடைய முழு அருளும் நமக்கு கிடைக்கிறது.

ஒரு கொடியவனாக கருதப்பட்ட அருணகிரிநாதர் பாடும் பெரும் புலவராக மாற்றியது முருகப்பெருமானுடைய கருணையும் அவருடைய அருளும் அதைவிட முக்கியமாக அது கிடைப்பதற்கு அருணகிரிநாதரின் உண்மையான மனம் மாற்றமே ஆகும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US