பகவத் கீதை: இந்த குணம் கொண்ட மனிதனை எவராலும் நெருங்க முடியாதாம்
பகவத் கீதை என்பது பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொன்ன உபதேசம் மட்டுமல்லாமல் இந்த உலகம் அழியும் வரை ஒவ்வொரு பக்தர்களுக்காகவும் விட்டுச் சென்ற உபதேசமாகும். அந்த வகையில் ஒரு மனிதன் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் சொல்லியிருப்பதை பற்றி பார்ப்போம்.
வைராக்கியம்:
வைராக்கியம் என்பதை பலரும் அவர்களுடைய புரிதலுக்கு ஏற்ப புரிந்து கொள்கிறார்கள். ஆனால் பகவான் கிருஷ்ணர் இங்கு மனிதனுக்கு ஏன் வைராக்கியம் வேண்டும் என்பதை பற்றி மிக தெளிவாக உணர்த்துகிறார்.

விவிக்த்ஸேவி, லக்வாஷி, யத்வாக்'காயமானஸ்ஹ,
தியானயோக்பர்ஹ, நித்யம்', வைராக்யம்', ஸமுபாஷ்ரித் |
அதாவது மனிதனுடைய வாழ்க்கையில் பல துன்பங்கள் அவன் செய்கின்ற செயல்கள் மீதும், சுற்றி உள்ள உறவினர்கள் மீதும் வைக்கக்கூடிய பற்றுதலால் வரக்கூடியதே ஆகும். ஆதலால் இங்கு எவன் ஒருவன் எதன் மீதும் பற்று இல்லாமல் மனதை கட்டுப்படுத்தக்கூடிய வைராக்கியத்தை வளர்த்துக் கொள்கிறானோ அவனே சிறந்த மனிதன் ஆகின்றான் என்கிறார் கிருஷ்ண பகவான்.

மேலும், கிருஷ்ண பகவான் சொல்லக்கூடிய வைராக்கியம் என்பது நாம் எதையும் கண்டு கொள்ளாமல் செல்வது அல்ல மாறாக வாழ்க்கையில் வெற்றி, தோல்வி, வலி மகிழ்ச்சி என்று எது வந்தாலும் மனம் எதற்கும் ஆர்ப்பாட்டம் கொள்ளாமல், வருத்தம் அடையாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவத்தைவளர்த்துக் கொள்வதை பற்றி குறிக்கிறார்.
மனிதனுடைய மனமானது அவ்வப்போது மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும். அவனுடைய மனதை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் ஒரு சிறந்த வைராக்கியத்தை அவன் வளர்த்துக் கொள்ள வேண்டும். வைராக்கியம் படைத்த உள்ளம் கொண்டவனை யாராலும் எவராலும் வீழ்த்த முடியாது என்கிறார் கிருஷ்ண பகவான்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |