நாளைய ராசி பலன் (11-07-2026)

Report

1. மேஷம்:

உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீண்ட நாட்கள் தடைப்பட்ட காரியம் கைக்கூடி வரும். குடும்பத்துடன் வெளியே சென்று மகிழ்வீர்கள்.

2. ரிஷபம்:

பொருளாதாரத்தில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். வியாபாரம் வளர்ச்சி பற்றி ஆலோசனை செய்வீர்கள். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

3. மிதுனம்:

உங்கள் திறமை வெளிப்படும். உறவுகளில் இருந்து வந்த சிக்கல் விலகும். பொருளாதார ரீதியாக நீங்கள் சந்தித்த குழப்பங்கள் விலகும். மன குழப்பம் வரலாம். அமைதி காப்பது நல்லது.

12 ராசிகளிடமும் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான வாழ்க்கை பாடங்கள்

12 ராசிகளிடமும் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான வாழ்க்கை பாடங்கள்

4. கடகம்:

புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும். உங்களுக்காக நீங்கள் நேரம் செலவு செய்வீர்கள். புதிய ஆடை மற்றும் பிடித்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நன்மையான நாள்.

5. சிம்மம்:

ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு பொற்காலம். உடன் பிறந்தவர்கள் இடையே நல்ல புரிதல் உண்டாகும். தாய் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

6. கன்னி:

நட்புகள் இடையே சிறு சிறு சண்டை வந்து செல்லும். வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டிய நாள். தேவை இல்லாத செலவுகள் வரலாம். கலை துறையில் இருப்பவர்களுக்கு நல்ல காலம்.

7. துலாம்:

உங்களுக்காக சில விஷயம் வாங்கி கொள்வீர்கள். உங்கள் மீது நம்பிக்கை மலரும். புதிய நட்புகள் அறிமுகம் கிடைக்கும். வேலைக்காக திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.

8. விருச்சிகம்:

குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் வந்து மறையும். வியாபாரத்தில் சந்தித்த நஷ்டத்தை சரி செய்வீர்கள். குழந்தைகள் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள்.

நீங்கள் மிதுன ராசி லக்னத்தில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கை முழு பலன் இதோ

நீங்கள் மிதுன ராசி லக்னத்தில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கை முழு பலன் இதோ

9. தனுசு:

பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். குடும்பத்தில் இருந்த வந்த பிரச்சனைகள் சரி ஆகும். பிள்ளைகளால் உங்களுக்கு பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். எதையும் தீர ஆலோசித்து செயல்படுவது அவசியம்.

10. மகரம்:

காலை முதல் மனதில் சிறு சிறு குழப்பங்கள் வந்து செல்லும். நெருங்கியவர்களிடம் இருந்து நினைத்த உதவிகள் கிடைக்கும். உங்கள் திறமை வெளிப்படும். பெயர் புகழ் கிடைக்கும் நாள்.

11. கும்பம்:

தொழில் ரீதியாக சில போட்டி பொறாமைகள் சந்திக்கலாம். நிதானம் கடைபிடிப்பது அவசியம். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். வெளிநாடு தொடர்பான தொழில் சிறந்து விளங்கும்.

12. மீனம்:

திடீர் பணவரால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளுக்காக நீங்கள் முக்கிய விஷயங்கள் செய்துகொடுப்பீர்கள். வியாபாரம் தொடங்குவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். நன்மையான நாள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US