12 ராசிகளிடமும் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான வாழ்க்கை பாடங்கள்

By Sakthi Raj Jul 10, 2026 07:40 AM GMT
Report

ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் நன்மை தீமை என்று இரண்டு குணங்கள் இருக்கிறது. அப்படியாக, 12 ராசிகளிடமும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான வாழ்க்கை பாடத்தை பற்றி பார்ப்போம்.

மேஷம்:

இவர்கள் ஒரு காரியத்தில் இறங்கி விட்டால் அதை முடிக்காமல் பின் வாங்க மாட்டார்கள். அதாவது எடுத்த வேலையை முழுமையாக முடிப்பதற்கு நாம் இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ரிஷபம்:

பிறரை பகைக்காமல் ஒரு காரியத்தை எப்படி சாதிக்க வேண்டும் என்று இவர்களை பார்த்து தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மிதுனம்:

காலம் வரும் வரை பொறுமையாக காத்திருந்து தன்னுடைய நகர்வை வைக்கக் கூடிய வித்தையை இவர்களிடம் தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

31 தானங்களும் பலன்களும்.. உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஆன்மீக ரகசியம்

31 தானங்களும் பலன்களும்.. உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஆன்மீக ரகசியம்

கடகம்:

சுற்றி உள்ளவர்களை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை இவர்களை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

சிம்மம்:

எல்லோரிடமும் பகைக்காமல் நட்பாக பழகுவது எப்படி என்று இவர்களை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

கன்னி:

குடும்பத்தினரை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை இவர்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.

துலாம்:

ஒருவரை எப்படி முழுமையாக நம்ப வைப்பது என்பதை இவர்களைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

விருச்சிகம்:

யாரையும் முழுமையாக நம்பாமல் முதலில் அவர்களை ஆராய்வது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும்.

தனுசு:

ஒருவருடைய உணர்வுகளுக்கு எப்படி மதிப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த ஒரு வழிபாடு நொடியில் உங்கள் வாழ்க்கையை மாற்றும்.. என்ன தெரியுமா ?

இந்த ஒரு வழிபாடு நொடியில் உங்கள் வாழ்க்கையை மாற்றும்.. என்ன தெரியுமா ?

மகரம்:

எந்த நேரத்திற்கு எப்படி முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

கும்பம்:

தன்னை நம்பியவர்களை கைவிடாமல் எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை இவர்களிடம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மீனம்:

எவ்வளவு பெரிய தோல்வியாக இருந்தாலும் அதிலிருந்து விடுபடுவது எப்படி என்று பார்ப்போம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US