பிரான்ஸில் தமிழர்களின் நலம் காக்கும் ஸ்ரீ மாணிக்க விநாயகர்
விநாயகர் அவர் தான் எல்லாவற்றுக்கும் முதன்மை ஆனவர். விநாயகரை வணங்க சகல செல்வங்களும் சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
உண்மையில் எந்த காரியம் தொடங்க வேண்டும் என்றாலும் விநாயகரை வழிபட்டு பின்பு தான் அந்த காரியம் தொடங்குவோம்.
அப்படியாக விநாயகர் இந்தியாவில் மட்டும் இல்லை பிரான்ஸ் நாட்டிலும் அருள் பாலிக்கின்றார்.
பாரிஸ் நகரின் La Chapelleல் ஸ்ரீ மாணிக்க விநாயகர் அருள்பாலிக்கின்றார். இங்கு சென்று இவரை வழிபட வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகி வாழ்க்கையில் நல்ல மாற்றம் கிடைப்பதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
அங்கு வாழும் தமிழ் வாழ் மக்களின் துயரங்களை தீர்க்கும் விநாயகராகவும் பாதுகாவலராகவும் இருந்து வருகிறார்.
1985 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோயில் தமிழ் கலாச்சாரத்தையும், பண்புகளையும் வளர்க்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.
பாரிசின் மையப்பகுதியில் மற்ற கலாசார மக்களுக்கு தமிழர்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் விதமாகவும் அமையப்பெற்றுள்ளது.
புலம்பெயர்ந்த எம் மக்களுக்கு தாங்கள் நினைத்த காரியத்தை தடையின்றி நடாத்தி கொடுக்கிறார் ஸ்ரீ மாணிக்க விநாயகர்.
இந்துக்களின் பண்டிகைகள் நாளில் விசேஷமான பூஜைகள் நடைபெறுகிறது, அப்பகுதி மட்டுமின்றி அருகிலுள்ள நகரங்களில் இருந்து மக்கள் வந்து கலந்து கொள்கின்றனர்.
இதன்மூலம் எம் மக்கள் ஒன்றிணைந்து சமூக இந்து கலாசார நிகழ்வுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |