இன்று வெள்ளிக்கிழமை: இந்த பூஜை செய்தால் நல்லது
வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உரிய நாளாகும், சுக்கிரனுக்குரிய தெய்வம் மகாலட்சுமி என்பதால் வெள்ளிக்கிழமை மங்களகரமான நாளாக பார்க்கப்படுகிறது.
இன்றைய நாளில் விரதம் இருந்து பூஜை செய்து வந்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும்.
செல்வத்தின் தெய்வமாக பார்க்கப்படும் மகாலட்சுமியை மனதார வணங்கி வந்தால் வீட்டில் செல்வ வளம் எப்போதும் குறையாமல் இருக்கும்.
அப்படியாக மகாலட்சுமியின் வடிவங்களில் ஒன்றான வைபவ லட்சுமியை இன்று பூஜை செய்து வரலாம்.
11 அல்லது 21 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும், பால்- பழங்கள் மட்டும் சாப்பிட்டு காலை தொடங்கி மாலை வரை விரதம் இருக்க வேண்டும்.
விரதம் இருக்கும் முறை
அதிகாலையில் குளித்து விட்டு வீட்டில் உள்ள மனைபலகையில் ஒன்றில் தூய்மையான துணியின் மீது மகாலட்சுமியின் படம் அல்லது சிலையை வைக்க வேண்டும்.
இதனை பூக்களால் அலங்கரித்து நெய் தீபம் ஏற்ற வேண்டும், நைவேத்தியமாக பால் பாயாசம் படைக்கலாம்.
அஷ்டலட்சுமிகளை மனதார வணங்கிவிட்டு அவர்களுக்குரிய மந்திரத்தை கூற வேண்டும்.
கனகதாரா ஸ்தோத்திரம், அஷ்டலட்சுமி போற்றி துதி பாடுவது கூடுதல் சிறப்பு.
மாலை நேரத்தில் வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப்பழம், பால் பாயாசம் படைத்து வழிபட வேண்டும், விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.
தொடர்ந்து 11 அல்லது 21 வாரங்கள் இதை செய்து வந்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.