கஜகேசரி யோகம் - ஜனவரியிலேயே 5 ராசிகளுக்கு விஸ்வரூப வளர்ச்சி ஜனவரி 2, 2026 சந்திரனும், குரு பகவானும் மிதுன ராசியில் இணைந்து இந்த யோகத்தை உருவாக்குகின்றனர். கஜகேசரி யோகத்தால் அதிக பலன்களைப் பெற உள்ள ராசிகள் குறித்து பார்ப்போம்.

ரிஷபம்
மனதில் தெளிவு பிறக்கும். தடைபட்டிருந்த பண வரவு கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்ய உகந்த நேரம் ஆகும். சமூகத்தில் உங்கள் கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரும். நிதி ரீதியாக வலுவான நிலையை அடைவீர்கள்.
மிதுனம்
நீண்ட நாட்கள் ஆசைகள் நிறைவேறும். நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். மங்கள நிகழ்வுகளின் காரகரான குரு பகவான் உங்களுக்கு சுப நிகழ்ச்சிகள் நடத்தும் வாய்ப்புகளை கொடுப்பார். வீட்டில் அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
சிம்மம்
தொழிலில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பால் திடீர் பணவரவு கிடைக்கும். நேர்காணல் முடித்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். வேலையில்லாமல் தவித்து வருபவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கும். தலைமைப் பண்பு வெளிப்படும். அரசு உதவிகள் கிடைக்கும்.
கன்னி
சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். ஆன்மீகப் பயணங்கள் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெரியவர்களின் ஆசி முழுமையாகக் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான சுப செய்திகள் கிடைக்கும்.
தனுசு
உடல் உபாதைகள் நீங்கும். எதிரிகளை வீழ்த்தும் தைரியம் பிறக்கும். கடன் சுமைகள் குறையத் தொடங்கும். சமூகத்தில் மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும். திடீர் பண வரவு மற்றும் செல்வம் சேரும். உங்கள் பேச்சாற்றல் மேம்படும்.