பகவத் கீதைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் எங்கு இருக்கிறது தெரியுமா?

By Sakthi Raj Mar 20, 2026 08:44 AM GMT
Report

மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு உபதேசித்த பகவத் கீதை உலகம் இருக்கும் வரை பக்தர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். அந்த வகையில் குஜராத் மாநிலம் சோம்நாத்தில் ஒரு கிருஷ்ணர் கோயில் இருக்கிறது. இந்த கோயில் பகவத் கீதைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தலமாக விளங்குகிறது.

ஹிரன், கபிலா, சரஸ்வதி ஆகிய நதிகள் இணையும் திருவேணி சங்கம இடத்தில் ஆற்றங்கரையில் இந்த கோவில் அமைய பெற்று இருக்கிறது. காவி வண்ணம் தீட்டப்பட்ட மகாலை போன்றது ஒரு தோற்றத்தில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் தியானம் செய்வதற்கு என்று தனி இடம் உள்ளது.

பகவத் கீதைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் எங்கு இருக்கிறது தெரியுமா? | Gita Mandir In Somnath

ஒருவருக்கு ஏழரை சனி எந்த மாதிரியான துன்பங்கள் கொடுக்கும்?

ஒருவருக்கு ஏழரை சனி எந்த மாதிரியான துன்பங்கள் கொடுக்கும்?

இதைத் தாண்டி சென்றால் கருவறையில் சலவை கல்லால் ஆன நின்று கோலத்தில் குழலூதும் கிருஷ்ணரை நாம் தரிசனம் செய்யலாம். கிருஷ்ண பகவான் தலையில் கிரீடம் சாந்தமே உருவான பசுவுடன் அவர் காட்சி கொடுக்கிறார். கோவிலுக்குள் லட்சுமி நாராயணன், சீதாராமன், கிருஷ்ணர் ஆகியோர் கால் பதித்த இடத்தில் சலவை கண்ணால் ஆன பாதுகைகள் அமையப்பெற்றிருக்கின்றன.

இந்த வளாகத்தை "சீ கோலக்தாம்" என்று சொல்கின்றனர். முக்கியமாக எல்லோரும் தரிசிக்க வேண்டிய ஒரு இடம் ஒன்று இருக்கிறது. இந்த வளாகத்தில் பலராமர் குகை ஒன்று உள்ளது. இங்கு தங்கி இருந்தபோதுதான் பலராமர் உயிர் விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகவத் கீதைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் எங்கு இருக்கிறது தெரியுமா? | Gita Mandir In Somnath 

தினமும் செய்யும் இந்த 5 விஷயங்கள் அதிர்ஷ்டத்தை பெற்று கொடுக்குமாம்

தினமும் செய்யும் இந்த 5 விஷயங்கள் அதிர்ஷ்டத்தை பெற்று கொடுக்குமாம்

அதன் பின் அவர் சேஷ பாம்பாக மாறி ஒரு துவாரத்தின் வழியாக மேல் உலகத்திற்கு சென்றடைந்தார் என்பது வரலாறு. இப்படி பல அதிசயம் நிறைந்த கோவில் பிர்லாவால் என்பவர் மூலம் 1970 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் வளாகத்தை "ஸ்ரீ கோலக்தாம்" என்று அழைக்கின்றனர்.

பகவத் கீதையை வாசிப்பவர்களும் கிருஷ்ண பகவானின் பக்தர்களும் நிச்சய வாழ்நாளில் ஒருமுறை இந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தால் கட்டாயம் அவர்களுக்கு கிருஷ்ண பகவானுடைய அருள் கிடைப்பதோடு மனதில் நிறைய ஆனந்தத்தை அவர்கள் பார்க்கலாம். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US