வாழ்க்கையில் அதிர்ஷ்டம் உண்டாக்க செய்யும் சில சுவாரசிய நிகழ்வுகள்
பொதுவாக நம் வீடுகளில் சில விஷயங்களை பார்த்தால் நல்லது என்றும்,சில விஷயங்கள் பார்த்தால் அபசகுனம் என்று சொல்லுவார்கள்.அப்படியாக நம் வீடுகளில் மற்றும் பொது வெளியில் செல்லும் பொழுது எதை எல்லாம் பார்த்தால் அதிர்ஷ்டம் எவை எல்லாம் தீமை விளைவிக்கும் என்ற சுவாரசிய தகவல் பற்றி பார்ப்போம்.
நம் வீடுகளில் எதாவது இனிப்பு திறந்து வைத்தாலே,கீழே சிதறினாலோ எறும்புகள் வருவது இயல்பு.அப்படியாக சிவப்பு எறும்புகள் காட்டிலும் கருப்பு எறும்புகள் வீட்டிற்குள் நுழைந்தால் விரைவில் அதிர்ஷ்டம் வரும் என நம்பப்படுகிறது. அதனால் தான் பலரும் சிவப்பு எறும்பை போன்று கருப்பு எறும்பை விரட்டுவதில்லை.
மேலும் இந்து மதத்தில் கோயில்களில் பூஜை செய்யும் பொழுது தேங்காய் உடைப்பது வழக்கமாகும். அப்படி உடைக்கும் போது தேங்காயில் பூ இருந்தால் அது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. வீட்டில் ஏதோ நல்ல விஷயம் நடக்கபோவதை உணர்த்துவதாகும்.
அடுத்த படியாக நம் வீடுகளில் குருவி உள்ளிட்ட பறவைகள் கூடு கட்டுவது நல்ல சகுணமாகும். வீட்டின் முன் உள்ள மரங்களிலும் கூடு கட்டினால் கூட அது அதிர்ஷ்டமாகவே பார்க்கப்படுகிறது.
நம் வீடுகளில் விளக்கு ஏற்றுவோம்.அப்படி விளக்கு ஏற்றும் போது, மணி அடிப்பதை உணர்ந்தால் நம் நினைத்தது நடக்கும் என சொல்லப்படுகிறது. விரைவில் நல்ல செய்திகள் நடக்கும் என்று நம்பப்படுகிறது.
நமது இந்து மதத்தில் பசுவை கடவுளாக பார்த்து அதை வணங்குவது உண்டு.நம் வீட்டில் இருந்து வெளியே செல்லும் போதோ, ஏதோ ஒரு நல்ல விஷயத்திற்காக செல்லும் போதோ வெள்ளை பசுவை கண்டால் அது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.
மேலும் செவ்வாய் கிழமைகளில் வீட்டு கூரையின் மீது குரங்குகள், மயில்களை கண்டால் அதிர்ஷ்டமாக பார்க்க படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |