பக்தர்களுக்கு கடன்பட்ட திருப்பதி ஏழுமலையான்

By Yashini May 30, 2024 04:43 AM GMT
Report

திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.

திருப்பதிக்கு வரும் அனைத்து பக்தர்களின் காதுகளிலும் வேங்கடேச ஸ்தோத்திரம் என்ற பாடல் கேட்பதை தவிர்க்க இயலாது.

பிரசித்தி பெற்ற இந்த ஸ்தோத்திரத்தை அருளியவர் மார்க்கண்டேய மகரிஷி ஆவார். 

பக்தர்களுக்கு கடன்பட்ட திருப்பதி ஏழுமலையான் | Govindan Owes To The Devotees

இந்த ஸ்தோத்திரத்தில் வரும் "விநா வேங்கடேஸம் ந நாதோ ந நாத" என்ற வரியின் பொருள் "உன்னைத் தவிர வேறு தெய்வமில்லை.. உன்னையே சரணடைகிறேன்" என்பது.

அப்படி ஸ்துதி செய்த மார்க்கண்டேய மகரிஷிக்கு திருப்பதி சீனிவாசப் பெருமாள் காட்சி தந்து அருள்புரிந்தார்.

நாமும் அந்த ஸ்தோத்திரத்தை சொல்லி வணங்கினால், திருப்பதி ஏழுமலையான் அருள் நமக்கும் கிடைக்கும். இதனை திருமலைவாசனே வேறு விதமாக சொல்லியிருக்கிறார்.

பக்தர்களுக்கு கடன்பட்ட திருப்பதி ஏழுமலையான் | Govindan Owes To The Devotees

அதாவது "என்னை கோவிந்தா.. என்று ஒரு முறை அழைத்தால், உனக்கு நான் கடன்பட்டவன் ஆகிறேன்.

இரண்டாவது முறை கோவிந்தா.. என்று அழைத்தால் அந்த கடனுக்கு வட்டி கொடுப்பேன்.

மூன்றாவதாக கோவிந்தா.. என்று அழைத்தால் அந்த வட்டிக்கு வட்டி தருவேன்" என்று சொல்லியிருப்பதாக திருப்பதி தல புராணம் தெரிவிக்கிறது.

குபேரனுக்கு மட்டும் கடன்பட்டவராக இல்லாமல், தனது நாமத்தை உச்சரிப்பவர்களுக்கும் திருப்பதி ஏழுமலையான் கடன்பட்டவனாக இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.   


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US