குரு பெயர்ச்சி பலன்கள்: ஜூன் முதல் நிதி நிலையில் உச்சம் பெறும் 3 ராசிகள்!
ஜோதிட ரீதியில் கிரகங்களின் இடப்பெயர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட காரணம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் ஆற்றல் மிக்க கிரகங்கள் இணைவதால் உருவாகும் ராஜ யோகங்கள் என்பன 12 ராசிகளின் வாழ்க்கையிலும் ஆதிக்கம் செலுத்தும் என்பது தான்.
அந்தவகையில், தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தனது உச்ச வீடான கடக ராசியில் ஜூன் 2, ஆம் திகதி பெயர்ச்சியாகின்றார்.

குருவின் நிலையால் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், குரு கடக ராசிக்கு பெயர்ச்சியானதால்,எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் என்பது குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

குரு பகவானின் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல வழிகளிலும் சாதக மாற்றங்கள் நிகழப்போகின்றது.
இந்த காலகட்டத்தில் எடுக்கும் முடிவுகள் வெற்றியில் முடியும். இதுவரையில் இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும்.
உடன் பிறந்தவர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். நிதி நிலைமை பாரிய ஏற்றம் உண்டாகும். குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்லுவார்கள் இது போல் செல்வ செழிப்புக்கு பஞ்சமே இருக்காது.
கடகம்

குருவின் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு மங்களகரமாக மற்றும் அமோகமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுக்கும்.
முதல் வீடு லாபம், தன்னம்பிக்கை, ஆளுமையை குறிக்கும். இதனால்,நீண்ட கால கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்களை பெறுவீர்கள்.
கூட்டுத் தொழிலில் சிறந்த லாபத்தை பெற வாய்ப்புள்ளது. புதிய வழிகளில் வருமானம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் திறக்கும்.
விருச்சிகம்

குரு பகவான் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை கொடுக்கப்போகின்றது. குறிப்பாக தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
9வது வீடு அதிர்ஷ்டம், செல்வம், பதவி உயர்வை குறிக்கும். இதனால், நீண்ட காலமாக தடைபட்ட விடயங்கள் வெற்றிகரமாக நிறைவு பெறும்.
பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை எதிர்ப்பார்க்கலாம். மொத்தத்தில் குரு பெயர்ச்சியால் சொகுசு வாழ்க்கை அமைவது உறுதி.