கடகத்தில் குரு பெயர்ச்சி... இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவ கிரகங்களின் நிலையானது ராசிபலன் கணிப்பில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
காரணம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் ஆற்றல் மிக்க கிரகங்கள் இணைவதால் உருவாகும் ராஜ யோகங்கள் என்பன அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் ஆதிக்கம் செலுத்தும்.

அந்தவகையில், தேவர்களின் குருவாக திகழும் குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தனது உச்ச வீடான கடக ராசியில் ஜூன் 2, ஆம் திகதி பெயர்ச்சியாகின்றார்.
குறித்த பெயர்ச்சியானது மிகச்சிறந்த ராஜயோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரக்கூடிய மங்களகரமான நிகழ்வாக கருதப்படுகின்றது. அதனால் உச்சபட்ச அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்குல் குரு பெயர்ச்சி நிகழ்வதால் இவர்கள் வாழ்வில் வெற்றிக்கான வாய்ப்புகள் வரப்போகின்றது.
தொழில் விடயத்தில் இவர்கள் எதிர்கொண்ட தடைகள் நீங்கி முன்னேற்றத்துக்கு வழிகள் உருவாகும். புதிய தொழில் முயற்ச்சிகள் வெற்றியளிக்கும்.
கடன் பிரச்சினைகளுக்கு முடிவுகட்டும் அளவுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டு உறவினர்கள் அல்லது நண்பர்களிடமிருந்து பெரிய தொகை பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.
கடகம்

கடக ராசியின் முதல் வீட்டில் இந்த குரு பெயர்ச்சி நிகழ்வதால் இவர்களின் தொழில், மற்றும் தனிப்பட்ட வாழ்வில் பல்வேறு வகையிலும் சாதமான சூழல் உண்டாகும்.
பொருளாதா ரீதியில் நிலையில் எதிர்பாராத அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். புதிய வழிகளில் வருமானம் பெருவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
வேலை தேடுபவர்களுக்கு மனதுக்கு பிடித்த வேலை அமையும். முன்னைய முதலீடுகளில் பெரியளவில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
கன்னி

கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்வதால், இவர்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நனவாகும். நிதி நிலையில் பாரியளவில் ஏற்றம் உண்டாகும்.
புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். குருவின் ஆசியால் தொட்டதெல்லாம் பொன்னாகும்.
குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள். அது போல் குருவின் ஆசியால் இவர்களுக்கு பணம் உட்பட செல்வ செழிப்பு அதிகரிக்கும்.