ராஜ வாழ்க்கை வழங்கும் குரு சுக்கிரன் சேர்க்கை.. உங்கள் ஜாதகத்தில் உள்ளதா ?

By Sakthi Raj Jul 24, 2026 08:41 AM GMT
Report

 ஜாதகத்தில் தேவ குருவான குரு பகவானும் வெள்ளி என்று அழைக்கப்படும் அசுர குருவான சுக்கிர பகவான் ஒருவர் ஜாதகத்தில் இணைந்திருந்தால் அந்த ஜாதகர் செல்வ செழிப்புடன் வாழக்கூடிய அமைப்பை பெற்றிருக்கிறார்.

அந்த ஜாதகருக்கு பணப்புழக்கம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். அதாவது இவர்களுடைய வங்கி கணக்கில் இல்லை என்கின்ற அளவு பணத்தை இவர்கள் எப்பொழுதும் வைத்துக் கொண்டே இருப்பார்கள்.

ஜாதகருக்கு நிறைய நகைகள் சேர்ந்து கொண்டே இருக்கும். அதே போல், இவர்களுடைய வீடுகளில் வெள்ளி பாத்திரங்கள் அதிகமாக இருக்கும். இந்த குரு சுக்கிரன் சேர்க்கை கொண்டவர்கள் வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள்.

ராஜ வாழ்க்கை வழங்கும் குரு சுக்கிரன் சேர்க்கை.. உங்கள் ஜாதகத்தில் உள்ளதா ? | Guru Sukiran Conjuction Bring Wealthy Life

நீங்கள் குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபட பகவான் கிருஷ்ணர் சொல்லும் 5 வழிமுறைகள்

நீங்கள் குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபட பகவான் கிருஷ்ணர் சொல்லும் 5 வழிமுறைகள்

ஜாதகருடைய வீட்டில் கட்டமைப்பு வேலைபாடுகள் எல்லாம் நன்றாக இருக்கும். அதற்காக அதிகம் செலவு செய்யக் கூடியவராக இருப்பார். ஜாதகர் உணவு சுவையாக இருந்தால் மட்டுமே உண்ணக்கூடிய அமைப்பை பெற்றிருப்பார்.

இருப்பினும் ஆண் ஜாதகராக இருந்தால் வாகனங்களில் மீது அதிக ஆசை இருக்கும். புதிதாக வாகனங்களை மாற்றிக் கொண்டே இருப்பார். இருப்பினும் இவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகளை கொடுக்கக்கூடும்.

இந்த கிரக அமைப்பு உள்ள பெண்கள் எப்பொழுதும் விதவிதமான தோடு மூக்குத்தி அணிய வேண்டும் என்று ஆசைப்படுவார். இந்த அமைப்பு இருப்பவர்களுக்கு அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் வாழ்க்கை இருக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US