நீங்கள் குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபட பகவான் கிருஷ்ணர் சொல்லும் 5 வழிமுறைகள்

By Sakthi Raj Jul 24, 2026 06:10 AM GMT
Report

இந்த உலகத்தில் மனிதர்களுடைய வாழ்க்கை என்பது பல நேரங்களில் நம்மை அறியாமல் சில தவறுகளை செய்து பிறகு அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் உள்ளது.

அந்த வகையில், நம்மில் தெரியாமல் செய்த சில தவறுகளை உணர்ந்த பிறகு ஒரு குற்ற உணர்ச்சி உண்டாகிவிடும். அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபடுவதற்கு நம்மால் பல நேரங்கள் இயலாமல் போவதும் உண்டு. அந்த வகையில் குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபடுவதற்கு பகவான் கிருஷ்ணர் சொல்லக்கூடிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

நீங்கள் குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபட பகவான் கிருஷ்ணர் சொல்லும் 5 வழிமுறைகள் | 5 Things Krishna Guides Us To Come Out Of Guilt

இந்த 3 ராசிகள் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மன்னிக்கவே மாற்றங்களாம்

இந்த 3 ராசிகள் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மன்னிக்கவே மாற்றங்களாம்

1. நாம் எப்பொழுதுமே தவறை மறைக்காமல் உணர்வதே அதனுடைய முதல் படி என்று பகவான் கிருஷ்ணர் சொல்கிறார். அதாவது முதலில் நாம் செய்த தவறை ஒப்புக்கொண்டால் மட்டுமே அதில் இருந்து நாம் முழுமையாக விடுதலை பெற முடியும். அதற்கான வழியை பெற முடியும் என்று சொல்கிறார்.

2. அதை போல் தவறிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதை மீண்டும் செய்யாமல் இருப்பதற்கு மாற்றத்தை நாம் உருவாக்க வேண்டும் என்று சொல்கிறார் .

நீங்கள் குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபட பகவான் கிருஷ்ணர் சொல்லும் 5 வழிமுறைகள் | 5 Things Krishna Guides Us To Come Out Of Guilt

உங்கள் ராசி படி கஷ்டம் என்றால் உடனடியாக வந்து உதவக்கூடிய ராசிகள் யார் தெரியுமா?

உங்கள் ராசி படி கஷ்டம் என்றால் உடனடியாக வந்து உதவக்கூடிய ராசிகள் யார் தெரியுமா?

3. மேலும், ஒரு சிலர் செய்த தவறுகளை நினைத்து தினமும் வருந்தி கொண்டே இருப்பார்கள். அதை மனதில் கொள்ளாமல் கடந்ததை மறந்து தற்போதைய சூழ்நிலையில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்கிறார் பகவான் கிருஷ்ணர்.

4. நம்முடைய பலனை நாம் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும். நாம் இந்த உலகத்தில் வழிப்போக்கர்கள். நம்முடைய கடமையை செய்வோம், நேர்மையாக இருப்போம். பலன் இறைவன் பார்த்துக் கொள்வான்.

5. நாம் பொதுவாக பிறரை மன்னித்து பழகுவது காட்டிலும் முதலில் நாம் நம்மை மன்னித்து பழக வேண்டும். அப்பொழுது அந்த குற்ற உணர்ச்சியின் சிக்கிக் கொள்ளாமல் அதில் இருந்து விடுபடுவதற்கான ஒரு வழி பிறக்கும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US