வக்ர நிவர்த்தியில் குரு - அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளபோகும் 4 ராசிகள்

By Pavi Jan 21, 2026 07:33 AM GMT
Report

மார்ச் 2026-ல் குரு பகவான் வக்ர நிவர்த்தியடைந்து நேர்கதிக்கு திரும்புகிறார். இதனால் பலன்பெறும் ராசிகள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 குரு வக்ர நிவர்த்தி

ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியின்போதும் ஒவ்வொரு ராசிகளின் எதிர்கால கணிப்புக்கள் கணிக்கப்படுகின்றது. தற்போது மிதுன ராசியில் வக்ர நிலையில் உள்ள குரு, மார்ச் முதல் நேர்கதியில் பயணிக்க உள்ளார்.

இந்த மாற்றம் சில ராசிகளுக்கு மிகவும் சிறந்த பலனை கொடுக்கும். இந்த நிலையில் வக்ர கதி அடையப்போகும் குரு மார்ச் 11, 2026-ல் இது முழுமையாக நேர்கதிக்கு மாறுகிறார்.

இருப்பினும், மார்ச் தொடக்கத்திலிருந்தே இதன் நேர்கதி பயணத்தின் தாக்கம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன்மூலம் எந்த ராசிகளுக்கு நல்ல பலன் என்பதை பதிவில் பார்க்கலாம்.

வக்ர நிவர்த்தியில் குரு - அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளபோகும் 4 ராசிகள் | Guru Vakra Nivarthi 2026 Luck Zodiac Signs

மேஷம்

  • ​மேஷ ராசிக்கு 3-ம் இடமான தைரிய ஸ்தானத்தில் குரு வக்ர நிவர்த்தி அடைவதால் உங்களுக்கு கடந்த சில மாதங்களாக இருந்த மனகுழப்பங்கள் தீரும். 
  • புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும்.
  • முதலீடுகளில் நினைத்த லாபம் கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக முடிக்காமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  • மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். 

ரிஷபம்

  • ரிஷப ராசிக்கு குருவின் நேர்கதி நல்ல பலன்களைத் தரும்.
  • வியாழன் 2-ம் வீடான தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுடைய வருமானம் உயரும்.
  • இதுவரை இருந்த பணப் பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் உருவாகும். 
  • இதவரை இருந்த மன அழுத்தம் குறைந்து நல்ல காலம் பிறக்கும். 

சிம்மம்

  • சிம்ம ராசிக்கு குருவின் நேர்கதி சிறப்புப் பலன்களைத் தரும்.
  • 11-ம் வீடான லாப ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காரணத்தால் அதிக வருமானம் கிடைக்கும். 
  • புதிய வருமான வழிகள் பிறக்கும். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும்.
  • வங்கி இருப்பு வேகமாக உயரும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
  • நீண்ட நாள் ஆசைகள் ஏதாவது இருந்தால் அதற்கு லாபம் கிடைக்கும். 

தனுசு

  • தனுசு ராசிக்கு 7-ம் இடமான களத்திர ஸ்தானத்தில் குரு வக்ர நிவர்த்தி பெறுகிறார்.
  • திருமணத்தில் இருந்த தடை நீங்கி லாபம் அதிகரிக்கும். 
  • கூட்டுத்தொழில் செய்து வருபவர்களுக்கு கூட்டாளிகளுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி தொழில் விரிவடையும்.
  • போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள்.
  • இந்த கால கட்டத்தில் அரசு வேலை கிடைப்பது உறுதி. 

மீனம்

  • மீன ராசிக்கு குருவின் நேர்கதி சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும்.
  • 4-ம் வீடான சுக ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் வசதிகள் பெருகும்.
  • வீடு, வாகனம் வாங்கும் யோகம் வரும்.  வேலையில் புதிய பொறுப்புகள் வரும்.
  • புதிய தொழில் தொடங்க இது சரியான நேரம்.
  • நீண்ட கால உடல் உபாதைகள் குறையத் தொடங்கும். ஆரோக்கியம் சிறப்பாக மாறும்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US