ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி விழா ஆரம்பம்
ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா நேற்று ஆரம்பமாகியுள்ளது.
ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி விழா
திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடப்பட்டு சிறப்பு வாய்ந்த தலமான ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா நேற்று வெள்ளிக் கிழமை ஆரம்பமாகியுள்ளது.
ஜோதிடத்தை பொறுத்தளவில் சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி முக்கியமானதொரு நிகழ்வாகும்.
அந்தவகையில் நவக்கிரகங்களில் மினவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுபவர் குரு பகவான்.
இவர் வருகிற மே முதலாம் திகதி மதியம் 12:59 மணிக்கு மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
இந்த மாற்றமானது பலரது வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. இதை முன்னிட்டு ஆலங்குடி கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமான நடைபெறவுள்ளது.
இந்த விழாவின் முதல் விழாவாக லட்சார்ச்சனை விழா நேற்று ஆரம்பமாகியுள்ளது. இதன் போது சன்னதியில் இருக்கும் அனைத்து தெய்வத்திற்கும் சிறப்பு அபிஷேகங்கள் நிகழ்ந்துள்ளன.
மேலும் ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்கள் தங்களது பரிகாரத்தை செய்துக்கொண்டனர்.
இதில் பங்கேற்றுக்கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் 2 கிராம் வெள்ளியில் தயாரான டாலர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
மேலும் வருகிற 28 ஆம் திகதி வரை முதல் கட்ட லட்சார்ச்சனையும், மே 6 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இரண்டாம் கட்ட லட்சார்ச்சனையும் நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |