கெட்ட நேரத்தை அடியோடு விரட்டும் அனுமன் சக்தி வாய்ந்த மந்திரம்
மனிதனுக்கு துன்ப காலம் என்பது அவனுடைய கிரக மாற்றங்களால் வருகிறது.அப்பொழுது அவன் மன வலிமை இழந்து மிகவும் உடைந்த நிலையில் காணப்படுவான்.அந்த நேரத்தில் தான் நாம் மிக வலிமையானவர்களை பற்றி கொள்ள வேண்டும்.
தெய்வங்களின் மிகவும் மனஉறுதியோடும்,தன்னம்பிக்கையோடும் இருப்பவர் அனுமன்.அவரை இறுக பற்றிக்கொண்டால் நம்முடைய துன்பத்தை நாம் தைரியமாக எதிர்கொள்வோம்.அப்படியாக மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நாம் எவ்வாறு அனுமன் வழிபாடு செய்து சரண் அடையவேண்டும் என்று பார்ப்போம்.
கஷ்டகாலங்களில் மனமும் உடலும் மந்தமாகி விடும்.ஆனால் அவ்வாறு முடங்கி விடாமல்,நம்பிக்கையோடு எழுந்து அருகில் இருக்கும் அனுமன் ஆலயம் செல்லுங்கள்.குறிப்பாக செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை, வியாழக்கிழமை செல்வது சிறந்த பலனை தரும்.
அனுமன் ஆலயம் சென்று,அனுமனுக்கு 2 விளக்கு போட்டு, இரண்டு துளசி இலைகளை அனுமனுக்கு சாத்தி அந்த கோவிலில் அமர்ந்து வழிபாடு செய்யுங்கள் அதோடு அனுமனின் சக்தி வாய்ந்த இந்த மந்திரம் சொல்ல நமக்கு மனத்தெளிவும்,எதையும் எதிர்த்து போராடும் மனஉறுதியும் பிறக்கும்.
மேலும் கோயில் சென்று வழிபாடு செய்யமுடியாதவர்கள் வீட்டிலே இந்த வழிபாடு செய்யலாம்.அதாவது அனுமனது திருவுருவப்படம், ராமரது பட்டாபிஷேகம் படம் இருந்தால் அந்த படத்திற்கு முன்பு அமர்ந்து விளக்கு ஏற்றி,அனுமன் மந்திரம் சொல்லலாம்.
அனுமன் மந்திரம்
அஞ்சனா கர்ப்ப சம்பூதம் குமாராம்
பிரம்ம சாரினம்
துஷ்ட கிரஹ நிவாஷய
அனுமந்தம் உபாஸ் மயே!
இந்த சிறிய மந்திரத்தை மனதார கஷ்ட காலங்களில் அனுமனிடம் வேண்டிக்கொண்டு சொல்லிவர உங்கள் கவலைகள் படிப்படியாக குறையும்.
மேலும் இந்த எளிய மந்திரத்தை முதன்முறை பார்த்து சொல்லுவோம்.பிறகு நம் மனதில் எளிதாக பதிந்து விடும்.ஆக நம் மனதில் அதை அடிக்கடி உச்சரித்து வர,அனுமனின் அருளால் வெற்றி உங்கள் பக்கம் நிற்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |