சுமங்கலி பெண்கள் குங்குமம் வைப்பதன் காரணம்
நம்முடைய நாட்டை பொறுத்வரை, சுமங்கலி பெண்கள் நெற்றியின் வகிட்டில் குங்குமம் வைப்பது வழக்கம்.
இரண்டு புருவங்களுக்கு இடையில் குங்குமம் வைப்பது குறித்து அறிவியில் மற்றும் ஆன்மிக காரணங்கள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.
அறிவியல் காரணங்கள்
2 புருவங்களுக்கு மத்தியில் குங்குமத்தை வைப்பதால், சுழி முனை சக்கிரத்தின் வழியே உடல் உஷ்ணம் தணிகிறது.
மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைத்து, மனதை அமைதிப்படுத்துகிறது. மேலும், உடலில் உள்ள சக்கரங்கள் சீராக இயங்க செய்கின்றன.
குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். மேலும், பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமையும்.
நெற்றியில் குங்குமம் இடுவதால் சூடு உடனடியாக தணிகிறது. மேலும், உணர்ச்சியற்ற நரம்புகளும் தூண்டப்படுகின்றன.
ஆன்மிக காரணங்கள்
நெற்றியின் மையப்பகுதியில் காந்தசக்தி அதிகமாக உள்ளதால், குங்குமம் வைப்பதன் மூலமாக மற்றவர்கள் நம்மை வசியப்படுத்துவதிலிருந்து தப்பிக்க முடியும்.
மேலும், வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் தருவதும், பெற்றுக்கொள்வதும் இரண்டுமே மாங்கல்யத்தின் பலத்தை பெருக்கும்.
புராணத்தின்படி, சிவபெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்ட போது, பார்வதியின் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டார்.
இதற்கு பிறகுதான், இந்து திருமணங்கள் அனைவற்றிலுமே, மணமக்களுக்கு நெற்றியில் குங்குமம் வைத்து விடும் பழக்கம் வந்ததாக சொல்கிறார்கள்.
அதேபோல, நெற்றியில் குங்குமத்தை வைத்துக் கொண்டால், கணவரின் ஆயுள் கூடுகிறதாம்.
பெண்களின் கணவருக்கு எந்த, கெடுதியும் நெருங்கவிடாமல், பார்வதி தேவி பாதுகாப்பாள் என்றும் நம்பிக்கை உள்ளது.