குழந்தை பாக்கியம் இல்லை என்ற கவலை வேண்டாம்? மனம் தளராமல் இந்த பரிகாரம் செய்யுங்கள்
இந்த உலகத்தில் இறைவன் எப்பொழுது யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்து வைத்திருக்கிறார். அப்படியாக, கர்ம வினைகளால் நம்முடைய வாழ்க்கையில் சில தடைகள் ஏற்பட்டு இருந்தாலும் அதை நாம் முழு இறை வழிபாட்டால் நிச்சயம் கடந்து விட முடியும்.
அப்படியாக, திருமணமாகி பல ஆண்டு காலம் குழந்தை பாக்கியம் இல்லை என்று வருந்துபவர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு சில எளிய பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.

இவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் தட்சிணாமூர்த்தி அல்லது குரு பகவானை தொடர்ந்து வழிபாடு செய்ய வேண்டும். குரு பகவான் தான் குழந்தை செல்வத்தை கொடுக்கக் கூடியவர்.
அதனால் அவரை சரணடைவது நல்ல பலன் கொடுக்கும். அதைப்போல், வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி வெள்ளை மலர்களால் அர்ச்சனை செய்தாலும் விரைவில் குழந்தை பாக்கியம் உண்டு.

செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு "ஓம் சரவணபவாய நமஹ" என்று 108 முறை பாராயணம் செய்வதும் 108 முறை எழுதி அதை மாலையாக முருகப்பெருமானுக்கு சாற்றி வழிபாடு செய்வதும் நல்ல பலனை கொடுக்கும்.
அதே போல் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் தானமாக கொடுங்கள். ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை, சந்தான கோபாலகிருஷ்ணன், முருகப்பெருமான் ஆகிய தெய்வங்களை மிகுந்த பக்தியுடன் வழிபடுவது உங்களுடைய தடைகளை அகற்றி விரைவில் குழந்தை பாக்கியத்தை பெறுவதற்கான அருள் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |