அபுதாபியை துபாயுடன் இணைக்கும் ஷேக் சையத் நெடுஞ்சாலையில் பிரம்மாண்டமான இந்து கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 800 கோடி பொருட்செலவில் அபுதாபியில் முதல் இந்து கோயில் திறக்கப்பட்டுள்ளது.
27 ஏக்கர் நிலப்பரப்பில் அமையப்பெற்றுள்ள இந்த கோயிலில், மணல் கற்களால் ஆன கலை வேலைப்பாடுகளுடன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீராமர், விநாயகர், ஐயப்பன் உட்பட ஐந்து தெய்வங்களின் சிலைகள் உள்ளன, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஏழு நாடுகளை குறிக்கும் வகையில் ஏழு கோபுரங்களும், எண்ணற்ற தூண்களும் உள்ளன.
அந்த தூண்களில் ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை ஆகியவற்றின் கதைகளை விவரிக்கும் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.