கட்டாயம் வீட்டில் இந்த நாட்களில் வெண்ணெய் உருக்கக்கூடாது
நம் வாழ்க்கையில் அதிக நேரம் செலவிடுவது நம்முடைய வீடு தான்.அப்படியாக வீட்டில் நேர்மறை எண்ணங்கள் நிறைந்து இருந்தால் மட்டுமே நம்முடைய மனமும் ஆரோக்கியமும் சீராக இருக்கும்.இந்த நேர்மறை ஆற்றல் என்பது உடனே உருவாகுவதில்லை.
அதற்கு வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நபர்களுடைய பங்கும் இருக்கிறது. அதையும் தாண்டி இறை நம்பிக்கை.இவை தான் நம்முடைய வீடும் நம்முடைய மனமும் சுத்தமாக இருக்க முக்கிய காரணமாக இருக்கிறது.
அப்படியாக வீட்டில் எப்பொழுதும் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கவும்,வீட்டில் நல்ல அதிர்வுகள் எப்பொழுதும் நிரம்பி இருக்கவும் நாம் செய்யவேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம்.
நம்முடைய வீடு சுத்தமாக இருப்பதால் நம்முடைய எண்ணம் சீராக இருக்கும்.மேலும் நேரம் இருந்தாலும் இல்லை என்றாலும் தினமும் தெய்வத்தின் படம் பார்த்து விளக்கு ஏற்றி வழிபட்ட பின் அந்த நாளை தொடங்குவது என்பது அந்த நாளுக்கான வெற்றியை தரும்.
வீட்டில் சிறிது நேரம் விளக்கு ஏற்றி விட்டு அதை குளிர வைக்கும் பொழுது ஒரு சிறிய பூ கொண்டு குளிர வைப்பது சிறந்த பலனை தரும்.அதை வாயால் ஊதி அணைப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
மாலை நேரத்தில் விளக்கு ஏற்றும் பொழுது வீட்டின் கட்டாயம் முன் வாசலில் மின் விளக்கு போட்டு பிறகே விளக்கு ஏற்ற வேண்டும்.விளக்கு ஏற்றும் பொழுது கட்டாயம் வீடு இருட்டாக இருக்க கூடாது.
வீட்டில் பூஜைக்கு பயன்படுத்தும் வெற்றிலை, பாக்கு பழங்களை நேரடியாக தரையில் வைக்க கூடாது. ஏதாவது தட்டு அல்லது இலையில் தான் வைக்க வேண்டும்.
மேலும்,சிலர் வீட்டில் அவர்களே வெண்ணெய் எடுக்கும் பழக்கம் இருக்கும்.அந்த வெண்ணையில் லட்சுமி தேவி வாசம் செய்வதால் அதை கட்டாயம் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் உருக்க கூடாது.
நாம் ஒருவருக்கு ஏதேனும் பொருட்கள் தானம் கொடுக்க போகின்றோம் என்றால் அதனுடன் சேர்த்து சிறிது துளசி சேர்த்து தானம் கொடுப்பது சிறந்த பலனை தரும் என்பது ஜோதிடத்தின் நம்பிக்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |