இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (1-04-2024)
ஏப்ரல் மாதம் முதல் நாளில் 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்
மேஷம்
சிந்தனைத் திறனால் சிக்கல் சிரமங்களுக்கு தீர்வு உண்டு. கடுமையான முயற்சியால் தொழிலில் வெற்றி அடைவீர்கள். வியாபாரத்தில் விரும்பிய வகையில் முன்னேற்றம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சுலபமாக நடத்துவீர்கள். வேலையிடங்களில் பாராட்டு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகளின் படிப்பில் அதிக அக்கறை காட்டும் நாள் . சந்திராஷ்டமம் என்பதால் எல்லாவற்றிலும் சற்று நிதானம் தேவை.
ரிஷபம்
தொழிலில் தேவையில்லாத எதிர்ப்புகள் சந்தித்தாலும் தீடிர் உதவியால் அதை சமாளித்துவிடுவீர்கள் . வேலைப் பளுவை விடா முயற்சியால் முறியடிப்பீர்கள். வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும் போட்டி பந்தயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது . பண உதவிகள் தாமதமாக கிடைக்கும். சந்திராஷ்டம காலம். கவனம் வேண்டும் .
மிதுனம்
மாமனார் வீட்டில் சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள் . வீடு புனரமைப்பு வேலைகளில் ஈடுபடுவீர்கள். வெளிநாட்டு பயணங்களுக்கு முயற்சி செய்வீர்கள்.. தான தர்மங்களில் ஆர்வம் உண்டாகும் . சிறு வியாபாரிகள் லாபம் அடைந்து மனநிறைவு பெறுவார்கள் . வேலையிடங்களில் பாராட்டு கிடைக்கும் . மேல் அதிகாரிகளின் ஆதரவால் உற்சாகம் அடைவீர்கள்.
கடகம்
உடல் உபாதைகள் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளதால் உணவு பழக்கத்தில் கவனம் தேவை. உறவினர்களால் தொல்லைகளை சந்திக்க நேரிடும் . தடைகளைத் தாண்டி வெற்றி அடைய கடுமையாக உழைப்பீர்கள.தந்தையின் உடல் நிலையில் சற்று கவனம் தேவை
சிம்மம்
எந்தக் காரியத்தை எடுத்தாலும் வெற்றி அடையும் நாள் . தொழிற்சாலைகளில் உற்பத்தியை பெருக்குவீர்கள். பதவி உயர்வு கிடைத்து மகிழ்ச்சி அடையும் நாள். வங்கிகளில் எதிர்ப்பார்த்த லோன் கிடைக்கும் .வீடு மனை இடங்கள் வாங்குவீர்கள்.பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனம் வாங்க வாய்ப்புகள் உள்ளது.
கன்னி
விரும்பிய வேலையில் சேர்வீர்கள். சம்பள உயர்வால் சந்தோஷம் அடைவீர்கள். விவசாய உற்பத்தியை பெருக்குவீர்கள். ஆடை அணிகலன்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள் . கணினித்துறையினர் கணிசமான லாபம் பெறுவீர்கள். நீதிமன்ற வழக்குகளில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் . மனைவியின் ஒத்துழைப்பால் அக்கறையோடு வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர்கள்.
துலாம்
சகோதர உறவுகளால் சந்தோசம் பெறுவீர்கள். தக்க சமயத்தில் அவர்களின் உதவியை அடைவீர்கள்.முன் கோபம் தவிர்த்தால் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம் . தொழிலில் தைரியமாக முடிவெடுப்பீர்கள். கடன்களை அடைத்து நிம்மதி அடைய வாய்ப்புகள் உண்டு . பண வரவை அதிகரிப்பீர்கள். விருச்சிகம் சாதுர்யமாக செயல்பட்டு வியாபாரத்தை பெருக்குவீர்கள். வாக்கு திறனால் வெளி இடங்களில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மனைவியின் பாராட்டைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு திறனில் முன்னேற்றம் காண்பீர்கள். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள்.
தனுசு
பேச்சுக்களால் பிரச்சனைகள் வரும் கவனம் தேவை, வயது இளையவர்களால் அவமானப்படும் நிலை உண்டாகலாம் . போட்டி பந்தயங்களில் அதிகமாக ஈடுபடவேண்டாம் வேலையில் கவனத்தை சிதற விடாதீர்கள். பொறாமைக்காரர்களால் வியாபாரத்தில் இடையூறை சந்திப்பீர்கள். தொழில்துறையில் ஏற்பட்ட மந்த நிலையால் பணவரவில் தடங்கலை சந்திக்கக்கூடும் .
மகரம்
தொட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்தி லாபத்தை அதிகரிப்பீர்கள். வியாபாரிகள் விறுவிறுப்பாக விற்பனை செய்வீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலை முன்னேற்றகரமாக நடத்துவீர்கள். குழந்தை பேறுக்காக மருத்துவ ஆலோசனை பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள் .
கும்பம்
நில விற்பனையில் உச்ச நிலையை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி வாகை சூடுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். வீடு கட்டுவதில் இருந்த பிரச்சனைகள் விலகும்.கடின உழைப்பால் வியாபாரத்தை மேம்படுத்துவீர்கள் . மழலை செல்வத்தின் அழுகுரலால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். சிறப்பான ஊதியம் பெறுவீர்கள்.
மீனம்
மூட்டு வலிக்காக தந்தையாரை மருத்துவமனையில் சேர்க்க நேரிடலாம் . கடல் கடந்து பயணம் மேற்கொள்வீர்கள். விட்டுப் போன உறவுகளை மீண்டும் வந்து சேர்வார்கள் . நண்பர்களின் உதவியால் சுப காரியங்கள் செய்வீர்கள். அரசு ஊழியர்கள் அதிக நன்மை அடைவீர்கள். பணியாளர்கள் துணிவாக செயல்படுவீர்கள்.