Numerology: எந்த எண் கொண்டவர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்
ஜோதிடத்தில் நியூமராலஜி என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பலரும் இந்த எண் கணிதத்தை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், நம்முடைய வாழ்க்கையில் எண்களும் மிக பெரிய பங்கு வகிக்கிறது.
சிலருக்கு இயல்பாகவே சில விஷயங்கள் அமைந்து விடும். சிலருக்கு நாம் மிகவும் மெனக்கிட வேண்டிய சூழ்நிலை இருக்கும். அதாவது ஒருவர் வண்டி நம்பர் வாங்குவதாக இருந்தாலும் சரி, கைப்பேசி எண் அல்லது திருமண தேதி, முக்கிய வீட்டு விசேஷங்கள், குழந்தைகளுக்கு பெயர் வைப்பது போன்ற முக்கிய நிகழ்வுகளில் நாம் இந்த நியூமராலஜி பார்ப்பது மிக மிக அவசியம் ஆகும்.
அவ்வாறு ஆலோசனை செய்து சில விஷயங்கள் செய்யும் பொழுது, நமக்கு உண்டாகும் தாக்கத்தை குறைக்க முடியும். இன்னும் சில நபர்கள் என்னதான் அவர்கள் பணம் சம்பாதித்தாலும் அதை சேமித்து வைக்கும் சூழ்நிலை உருவாகாது.
அவர்களுடைய விவரங்களை எடுத்துப்பார்த்தாலும் அதில் அவர்களுக்கு ஏற்ற வகையில் எண்கள் அமையாததே காரணம் ஆகும். அப்படியாக இந்த எண் கணிதம் மனிதன் வாழ்வில் எவ்வாறு வேலை செய்கிறது? என்று பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |