2026 காதல் தினம்: 12 ராசிகளில் நீங்கள் எப்படிப்பட்ட காதலர் தெரியுமா?
ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு குணங்கள் கொண்டிருப்பார்கள். அதாவது அவர்களுடைய அன்பை, காதலை வெளிப்படுத்துவதில் ஒவ்வொரு நபர்களும் வேறுபட்டு இருப்பார்கள். அப்படியாக, அன்பை கொண்டாட கூடிய தினமாக காதலர் தினம் இருக்கிறது.
காதல், அன்பு இல்லாத வாழ்க்கை நிச்சயம் சுவாரசியமற்றது தான். அந்த வகையில் ஜோதிட ரீதியாக 12 ராசிகளில் ஒவ்வொரு ராசிகளும் எப்படிப்பட்ட காதலர்கள் அவர்களுடைய காதலை எவ்வாறு வெளிப்படுத்துவார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினர் சற்று அவசரமாக செயல்பட கூடியவர்கள். இவர்களுக்கு எதையும் நேராக சொன்னால்தான் பிடிக்கும். தன்னுடைய துணை அல்லது காதலர் எப்பொழுதும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியினர் ஒரு நிலையான ஒரு உறவை எதிர்பார்க்கக் கூடியவர்கள். இவர்களுடைய துணைக்காக அவ்வப்போது பரிசுகள் கொடுத்து பல மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்க கூடியவர்கள்.
மிதுனம்:
மிதுன ராசியினர் பொருத்தவரை இவர்கள் அதிக புத்திசாலியாக செயல்படக் கூடியவர்கள். இருப்பினும் சில நேரங்களில் முடிவெடுப்பதில் சிரமப்படுவதால் இவர்களுடைய துணை அதற்கு ஆதரவு தெரிவிக்கும் போது காதல் சிறப்பாக இருக்கும்.
கடகம்:
கடக ராசியை பொறுத்தவரை இவர்கள் அதிக உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். மேலும் தங்களுடைய துணை உடைய பாதுகாப்பை அதிக அளவில் உறுதி செய்யக் கூடியவர்கள். துணைக்காக எதையும் செய்யத் துணிவார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியினர் பிரம்மாண்டத்தை எதிர்பார்க்கக் கூடியவர்கள். எந்த விஷயம் செய்வதாக இருந்தாலும் அதில் அதிக அளவில் ஆடம்பரத்தையும் சேர்க்கக் கூடியவர்கள். இவர்களுடைய காதலையும் அவ்வாறுதான் வெளிப்படுத்துவார்கள்.
கன்னி:
கன்னி ராசியிடம் காதல் என்று வரும் பொழுது நாம் எதையும் எதிர்பார்க்க முடியாது. இவர்கள் நடைமுறை மற்றும் எதார்த்தமான வாழ்க்கையை வாழ விரும்பக் கூடியவர்கள். இதை அவர்கள் துணையிடமும் எதிர்பார்ப்பார்கள்.
துலாம்:
துலாம் ராசியினர் காதலில் ஒரு அமைதியும் அதிகமான அன்பையும் எதிர்பார்க்கக் கூடியவர்கள். முடிந்தவரை இவர்கள் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்வார்கள் வந்தாலும் அமைதியாக எடுத்துச் சொல்லக் கூடியவர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் தங்கள் காதலர் மீது அதிகமான உரிமையை எடுத்துக் கொள்வார்கள். அதனால் அவ்வப்போது அந்த உரிமையை ஒரு அன்பு சண்டையாக மாறக்கூடும்.
தனுசு:
தனுசு ராசியினர் காதலை அதிக அளவில் கொண்டாட கூடியவர்கள். இவர்கள் தங்களின் துணையுடன் வித்தியாசமான இடங்களுக்கு சென்று வித்தியாசமான அனுபவங்களை பெற வேண்டும் என்று ஆசை கொள்வார்கள்.
மகரம்:
மகர ராசியினர் தங்களுடைய துணைக்காக நிறைய யோசிக்க கூடியவர்கள். துணை சொல்வதை அமைதியாக கேட்டு அவர்களுக்கு என்ன தேவையோ பூர்த்தி செய்யக் கூடியவர்கள்.
கும்பம்:
கும்ப ராசியினர் காதலர்களிடம் அவ்வப்போது அவர்களை மகிழ்விக்க சிறப்பு பொய்களை சொல்வதுண்டு. ஆனால் காலப்போக்கில் அந்த பொய்யை இவர்களை பிரிவையும் கொடுக்கக்கூடும்.
மீனம்:
மீன ராசியினர் காதலில் இருக்கும் பொழுது அவர்களுடைய எதிர்கால தேவைக்கான எல்லா விஷயங்களையும் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். தங்களுடைய காதலருக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்யக்கூடியவர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |