யாருடைய ஜாதகத்திற்கு சனிபகவான் வெற்றியை அள்ளி கொடுப்பார்
ஜோதிடத்தில் சனிபகவான் ஒரு முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். மேலும் ஒன்பது கிரகங்களிலும் சனிபகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் ஆவார். பலருக்கும் சனி பகவான் என்றாலே ஒருவித அச்சம் உருவாகும்.
காரணம் சனி பகவானுடைய சரியான புரிதல் இல்லாததே ஆகும். ஒருவர் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் பெயர் புகழ் பெற வேண்டும் என்றால் கட்டாயம் அவர்களுக்கு சனி பகவானுடைய துணை வேண்டும்.
அப்படியாக ஒருவருடைய ஜாதகத்தில் சனி பகவான் எவ்வாறு வேலை செய்கிறார்? அவருடைய அமைப்பு யாருக்கு சாதகமாக அமையும்? யாருக்கு பாதகமாக அமையும் என்று பார்ப்போம்.
மனிதனாகப் பிறந்த எல்லோரும் கட்டாயம் ஏழரை சனி என்ற ஒரு கட்டத்தை கடந்தாக வேண்டும். பலருக்கும் இந்த நிகழ்வு ஒரு அச்சத்தை உருவாக்குகிறது. ஆனால் சனி பகவான் ஒரு மனிதனுடைய சுய ஒழுக்கத்தையும் ஒரு மனிதனுடைய வளர்ச்சியையும் அவன் எவ்வாறு அடுத்த கட்ட வாழ்க்கைக்கு செல்வது என்று பாடம் கற்பித்த கொடுப்பதற்காகவே அவர் செயல்படுகிறார்.
அதாவது நாம் நன்றாக சிந்தித்து பார்த்தால் ஏழரை சனி அல்லது சனி திசை போன்ற காலங்களில் அவருடைய தாக்கம் நம் வாழ்க்கையில் முன்னோக்கி எடுத்து செல்லக்கூடிய ஒரு பயணமாக தான் இருந்திருக்கும். ஆரம்ப காலங்களில் சனிபகவானுடைய தாக்கம் விரக்தி பயம் போன்ற சூழலை உருவாக்கலாம்.
ஆனால் அதுவே காலப்போக்கில் நம்முடைய பலமாக மாறும். ஒரு மனிதனை அவனுடைய கர்ம வினைகளுக்கு ஏற்பவும் அவருடைய சுற்றுச்சூழலுக்கு ஏற்பவும் அவனை திறமைசாலியாகவும் பக்குவப்படுத்தவும் சனி பகவானை போல் ஒரு கிரகம் இல்லை. அதைப்போல் என்றோ செய்த தவறையும் சனி பகவான் ஞாபகப்படுத்தி அந்த தவறை உணர செய்யக்கூடியவர்.
ஆதலால் உங்கள் வாழ்க்கையில் பிறரால் பிரச்சனைகள் சந்திக்கிறீர்கள் என்றால் கவலை கொள்ளாதீர்கள். அந்த காலகட்டத்தில் உங்களால் உங்களுக்கு உதவ முடியவில்லை, நியாயத்தை தேடிக் கொள்ள முடியவில்லை என்று வருத்தம் இருந்தாலும், உங்களுக்காக சனிபகவான் அவருடைய கிரக மாற்றத்தின் பொழுது அந்த நபருக்கு தக்க பாடத்தை கற்றுக் கொடுப்பார்.
மேலும் சனி பகவானுடைய ஒவ்வொரு காலகட்டத்திலும் நம்முடைய வாழ்க்கையை முன்னோக்கிய பயணத்திற்கான ஏற்பாடுகளை நம் செய்ய தூண்டுவார். உறவுகள் மத்தியில் உண்மை மற்றும் போலி முகத்தை கண்டுகொள்ள உதவியாக அமைவார்.
சிலருக்கு தீய பழக்க வழக்கங்கள் இருக்கும். அதை தவறு என்று உணர வைத்து நல்வழிப்படுத்தக் கூடியவர் சனி பகவான் மட்டுமே. மேலும் சனி பகவானை பார்த்து யார் பயம் கொள்ள தேவை இல்லை என்றால் எவர் ஒருவர் தன்னுடைய சுய நலத்திற்காக பிறரை துன்புறுத்தாமல் நல்ல எண்ணத்தோடும் ஒழுக்கத்தோடும் நேர்மையோடும் வாழ்கின்றார்களே அவர்களுக்கு சனி பகவான் ஒரு வரம்.
அவ்வாறான மனிதர்களை சனிபகவான் இன்னும் மேம்படுத்தி மிகப்பெரிய சாதனையாளராக உருவாக்குகிறார். நல்ல செயல்கள் செய்ய முடியவில்லை என்றாலும் நல்ல எண்ணமே சனிபகவான் உடைய தாக்கத்தை குறைத்து அருளைப் பெற செய்கிறது.
ஆதலால், சனி பகவான் என்றால் எதிர்மறையான எண்ணங்கள் கொண்டிருப்பதை தவிர்த்து சனி பகவான் என்றால் விருப்பத்தோடு இவர் நமக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க காத்திருக்கிறார். இவருடன் பயணித்து இந்த கிரக மாற்றத்தை பயன்படுத்தி நம் வாழ்க்கையில் பல பாடங்களை கற்றுக்கொள்வோம் என்று நிதானத்தை கடைப்பிடிப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







