நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 8 வகையான கிருஷ்ணர் வழிபாடும் அதன் பலன்களும்

Report

1. சந்தான கோபால கிருஷ்ணன்:

யசோதையின் மடியிலே அமர்ந்த கோலத்தில் இருக்கும் கிருஷ்ணர். இந்த கோலத்தில் கிருஷ்ண பகவானை வழிபாடு செய்யும் பொழுது விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

2. பாலகிருஷ்ணன்:

தவழும் கோலத்தில் கிருஷ்ணர். இந்த கோலத்தில் இருக்கும் கிருஷ்ணரின் படத்தை ஆலயங்களிலும் பலரது வீடுகளிலும் காணலாம். இந்த கிருஷ்ணரை வழிபாடு செய்யும் பொழுது வீடுகளில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகிறது.

3. காளிய கிருஷ்ணன்:

காளிங்கன் என்ற நாகத்தின் மீது நடனம் புரியும் காளிய கிருஷ்ணன். இந்த கிருஷ்ணரை வழிபாடு செய்யும் பொழுது நம் வாழ்க்கையில் சந்திக்கும் எதிர்ப்புகள் விலகி, மனதில் நம்பிக்கை உருவாகிறது.

4. கோவர்த்தனதாரி:

தனது சுண்டு விரலால் கோவர்த்தன மலையை தாங்கி நிற்கும் கிருஷ்ண பகவான். இந்த கிருஷ்ணரை வழிபாடு செய்யும் பொழுது குடும்பத்தில் உள்ள பணக்கஷ்டங்கள் விலகுகின்றது.

2025 ஆவணி மாதம் சிறப்பாக அமைய 12 ராசிகளும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

2025 ஆவணி மாதம் சிறப்பாக அமைய 12 ராசிகளும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

5. ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்):

ராதையுடன் நின்று காட்சி கொடுக்கும் கிருஷ்ணர். இவரை வழிபாடு செய்தால் காதல் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

6. முரளீதரன்:

கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.

7. மதனகோபாலன்:

புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணர். இந்த கிருஷ்ணரை வழிபாடு செய்யும் பொழுது கலை துறையில் சிறந்து விளங்கலாம்.

8. பார்த்தசாரதி:

மகாபாரத போரில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கீதை உபதேசித்த திருக்கோலம். இந்த கிருஷ்ணரை வழிபாடு செய்யும் தர்ம சிந்தனையும் வாழ்க்கையில் எதையும் சரியாக யோசித்து முடிவு எடுக்கும் திறனும் பிறக்கும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US