நேரம் சரி இல்லை என்றால் கடவுளும் விலகிவிடுவாரா?
உயிர் இந்த பூமியில் பிறந்து விட்டது என்றால் எல்லாவற்றையும் சமாளிக்கவும் எதிர்கொள்ளும் தைரியமும் வளர்த்து கொள்ளவேண்டு.நம் வாழ்க்கை பயணத்தில் தாய்,தந்தை குரு தாண்டி,கடவுளும் காலமும் நமக்கு பாடம் கற்பித்து கொண்டு இருக்கும் ஆசான்கள் தான்.
காலம் போல் ஒரு சிறந்த நண்பனும்,ஆசிரியரும் இல்லை.அந்த வகையில் நாம் பலரும் ஒரு சில கடின காலங்கள் கடந்து வந்திருப்போம்.இருந்தாலும்,அந்த கால கட்டத்தில் கடவுள் கை பிடித்து கூட்டி செல்வது போல் எளிதாக சமாளித்திருப்போம்.
ஆனால் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு கால கட்டம் வந்திருக்கும்.எல்லாம் அவர்கள் கைமீறி போனது போல்!அந்த நேரத்தில் உலகத்தின் எல்லையை அடைந்து இருப்பார்கள்.இருட்டின் முழு அடர்த்தியை உணர்ந்து இருப்பார்கள்.
உதவ கரங்களே இல்லாத புது உலகத்தை பார்த்து இருப்பார்கள்.கடவுளும் விலகி நிற்பதை தெரிந்து இருப்பார்கள்.விடுதலையே இல்லாத சிறையில் அடைபட்டது போல் சிக்கி தவித்து கொண்டு இருப்பார்கள்.
ஆனால்,உண்மையில் அந்த நொடி தான் அவன் முழு சுதந்திற்காகவும் விடுதலைக்காகவும் போராடி கொண்டு இருக்கின்றான்.இங்கு உலகம் எல்லோரையும் கவனித்து கொண்டு இருக்கிறது.யாரை எந்த சூழலில் நிறுத்தினால் அவர்கள் இன்னும் மெருகேறுவார்கள் என்று தெரிந்து வைத்திருக்கிறது.
தர்ம சிந்தனையும்,எப்பொழுதும் ஒரு வெளிச்சம் நம்மை வந்து சேரும் என்று காத்திருப்பவர்களுக்கும் அந்த சிறை ஒரு வரம்.அந்த கடின கால கட்டத்தில் கர்ம வினைகள் எல்லாம் தீர்ந்து மன குழப்பம் குறைந்து,பிறப்பின் ரகசியம் அவர்களை தட்டி எழுப்பும் பொழுது,அவர்கள் சிறையின் இருட்டு குறைய ஆரம்பிக்கும்.
பிறகு,புது மனிதனாக வருவார்கள்.தெய்வத்தை எவ்வாறு வணங்க வேண்டும்?வரும் கஷ்டத்தை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று சிறந்த பாடம் கற்று தேர்ந்து இருப்பார்கள்.அந்த பாடம் எத்தனை பிறவி எடுத்தாலும் அவர்களுக்கு துணை நிற்கும்.
ஆக இறைவன் ஒருவரை மோட்சம் அடைய வைக்கவேண்டும்,சாதனை மனிதன் ஆக்கவேண்டும் என்று நினைத்து விட்டால் சமயங்களில் சற்று விலகி நின்று நமக்கு வாழ கற்று கொடுப்பான்.ஆனால் பலரும் அந்த சமயங்களில் மனம் உடைந்து தேற்றவே முடியாத சூழ்நிலைக்கு சென்று விடுவார்கள்.
இன்னும் சிலர் அந்த கடின நேரத்தில் தான் வழி தவறி செல்வதை பார்க்க முடியும்.ஆக எவன் ஒருவனின் நோக்கம் சரியாகவும்,இதுவும் கடந்து போகும் என்ற வலிமையான எண்ணமும் வைத்திருக்கின்றானோ அவர்களுக்கு இறைவன் எப்பொழுதும் துணை இருப்பார்.
அவனை நெருங்க அந்த எமனும், அவன் கடமையை செய்ய தயங்குவான்.ஆக இனி கஷ்ட காலம் வரும் பொழுது எதையும் தூக்கி எரிந்து,எதிர்மறை சிந்தனைக்குள் போகாமல் நம்பிக்கையுடன் காத்திருக்க கடவுள் உங்களை எங்கு நிறுத்தினரோ அங்கு இருந்து கைபிடித்து இன்னும் அழகான வாழ்க்கைக்குள் அழைத்து செல்வார்.இந்த உலகத்தில் எல்லாம் மாற ஒரு நொடி பொழுது போதும்.அந்த நொடியில் பல அதிசயங்கள் நிகழ்ந்து விடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |