வாழ்க்கையில் திடீர் அதிர்ஷ்டம் உண்டாக செய்ய வேண்டிய விஷயம் என்ன?

By Sakthi Raj Sep 23, 2026 06:20 AM GMT
Report

அதிர்ஷ்டம் என்பது இந்த உலகத்தில் திடீர் என கைகளுக்கு கிடைக்கூடியஅரியவகை பொக்கிஷம் இல்லை. அதிர்ஷ்டம் என்பது எவர் ஒருவர் நல்ல கர்மாக்களை விதைத்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கிறது. அதை நாம் அதிர்ஷ்டம் என்று சொல்கின்றோம்.

அந்த வகையில், வாழ்கையில் ஒருவருக்கு இவ்வாறான திடீர் அதிர்ஷ்டம் நடக்க வேண்டும் என்றால் அவர்கள் நல்ல மனிதராகவும் நல்ல சிந்தனையோடும் இருந்தாலே போதுமானது என்றாலும் ஆன்மீக ரீதியாக இறைவனோடு இந்த பிரபஞ்சத்தோடு இணைந்து சில விஷயங்களை செய்கின்ற பொழுது நிச்சயம் நமக்கு நல்ல விஷயங்களை நடக்க தொடரும்.

வாழ்க்கையில் திடீர் அதிர்ஷ்டம் உண்டாக செய்ய வேண்டிய விஷயம் என்ன? | How To Attract Luck In Life

அப்படியாக, தினமும் காலையில் வீடுகளில் விளக்கு ஏற்றுவது சாஸ்திர ரீதியாக கடைப்பிடிக்க கூடிய விஷயம் என்றாலும் தினமும் காலையில் ஒளி என்கின்ற அந்த நெருப்பை பார்க்கின்ற பொழுது நம்மிடம் இருக்கும் அந்த எதிர்மறை ஆற்றல்கள் நீங்குகிறது.

அதேபோல், எந்த நிலையிலும் இன்பமாக இருந்தாலும் துன்பமாக இருந்தாலும் இறைவனைக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் நன்றி தெரிவிப்பதற்கு நாம் மறக்கவே கூடாது. இந்த உலகத்தில் ஒரு மிகப்பெரிய துன்பங்களில் பசி முக்கிய பங்கு வகிக்கிறது.

வாழ்க்கையில் திடீர் அதிர்ஷ்டம் உண்டாக செய்ய வேண்டிய விஷயம் என்ன? | How To Attract Luck In Life

தண்ணீர் உணவு போன்ற உணவுகளை முடிந்த வரை தானம் செய்கின்ற பொழுது நிச்சயம் நம்முடைய உடலும் ஆன்மாவும் குளிர்ச்சி அடைகிறது.

அதை போல், தவறு செய்வதற்கான நிலை எப்பொழுது வந்தாலும் நீங்கள் அதை தேர்ந்தெடுக்காமல் நேர்மையாக நடக்கின்ற பொழுது இந்த பிரபஞ்சம் உங்களுடைய கைகளை பிடித்துக் கொண்டு வரும். இதுதான் அதிர்ஷ்டம். நல்ல விஷயங்கள் செய்பவர்களுக்கு வரக்கூடிய ஒரு பதிலையே நாம் அதிர்ஷ்டம் என்று சொல்கின்றோம்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US