கோபம் கொள்ளாமல் வாழ்வது எப்படி?
மனிதனின் மிக பெரிய எதிரியும் அவனின் மிக பெரிய ஆயுதமும் கோபம் தான்.ஆனால் இந்த இரண்டும் ஒருவரை அழித்து விடும்.ஆனால் ஒரு ஊரில் ஒரு துறவியை யார் என்ன அவமானம் படுத்தினாலும் அவர் கோபமே கொள்வது இல்லை.இதை பார்த்து பலருக்கும் ஆச்சிரியம்.
எப்படி இந்த துறவிக்கு மட்டும் யார் என்ன செய்தாலும் எவ்ளளவு அசிங்க படுத்தினாலும் கோபம் வரவில்லை இதை நாம் எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று சிலருக்கு ஆர்வம்.அப்படியாக ஒரு நாள் அந்த துறவியின் சிஷியர் ஒருவர் நாம் இன்று துறவியிடம் கேட்டு விடலாம் என்று சரியான நேரம் பார்த்து ஐயா மிகவும் சிறிய தவறு செய்தாலோ இல்லை கேலி செய்தாலோ பலருக்கும் பயங்கர கோபம் வரும்.ஆனால் தாங்கள் கோபமே கொள்ளாமல் வாழ்கிறார்களே அது எப்படி என்று கேட்டார்.
அதற்கு துறவியும் நான் ஒரு ஏரியில் காலி படகில் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம்.அப்படியாக ஒரு நாள் நான் தியானம் செய்து கொண்டு இருந்த பொழுது நான் அமர்ந்து தியானித்த படகை ஒரு படகு வந்து முட்டியது.
என் மனதிற்குள் யார் இது,மிகவும் அஜாக்கிரதையாக வந்து படகை முட்டியது என்று சினம் கொண்டு கண் விழித்து பார்த்தால் அது வெற்றுப்படகு.வீசிய காற்றுக்கு படகு மெதுவே அசைந்து அசைந்து வந்து இருக்கிறது.பிறகு உணர்ந்தேன் இந்த வெற்று படகிடம் கோபம் கொண்டு என்ன பயன் என்று.
அதே போல் தான் மனிதர்களும் யாராவது என்னிடம் கோப பட்டாலோ என்னை அசிங்கப்படுத்தினாலோ இவர்களும் வெற்று படகு தான் என்று உணர்ந்து அமைதி ஆகிவிடுவேன்.ஒரு மனிதனுக்கு ஞானம் எங்கே எப்பொழுது வேண்டும் ஆனாலும் பிறக்கலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |