வீட்டில் எளிய முறையில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்வது எப்படி ?

By Sakthi Raj Sep 05, 2024 07:00 AM GMT
Report

இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி.ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடத்தின் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினத்தில் பலருக்கும் எந்த முறையில் வழிபட வேண்டும் என்ற குழப்பங்கள் இருக்கும்.அப்படியாக விநாயகர் சதுர்த்தி தினத்தில் விநாயகரை வீட்டில் எப்படி எளிமையான முறையில் வணங்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

விநாயகர் சதுர்த்தி என்றாலே வீட்டில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவது தான் அதன் சிறப்பே.அப்படியாக விநாயகர் சதுர்த்தி நன்னாளில் கடைகளில் வாங்கிய அல்லது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை கொண்டு பூஜை செய்யலாம்.

வீட்டில் எளிய முறையில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்வது எப்படி ? | How To Celebrate Vinayagar Chathurthi At Home

வருகின்ற 7ம் தேதி வரும் விநாயகர் சதுர்த்தியை மதியம் 1 மணிக்குள் பூஜை செய்ய வேண்டும். ( காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை ராகு காலமும், மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை எமகண்டமும் வருவதால் அந்த நேரத்தில் வழிபடாமல் இருப்பது நல்லது)

பூஜை செய்வதற்கு முன் விநாயகர் சிலைக்கு முன்பாக வாழை இலை போட்டு வாழை இலையில் வெற்றிலை, பாக்கு, அவல், பொரி, வாழைப்பழத்தை வைக்க வேண்டும். பின்னர், விநாயகருக்கு பிடித்த உணவுகளான கொழுக்கட்டை, சுண்டல், பால், தயிர், தேன், அவல், பொறி, லட்டு போன்றவற்றை வைக்க வேண்டும்.

இவை அனைத்தும் வைக்க இயலாதவர்கள் கொழுக்கட்டை மற்றும் சுண்டல் வைத்தாலே போதும்.பழ வகைககள் என்று கொண்டால் விநாயகருக்கு விளாம்பழம், மாதுளை, வாழைப்பழம், கொய்யாப்பழம் ஆகியவற்றை வைக்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி அன்று எந்த இலை பூக்கள் கொண்டு பூஜை செய்ய வேண்டும்?

விநாயகர் சதுர்த்தி அன்று எந்த இலை பூக்கள் கொண்டு பூஜை செய்ய வேண்டும்?


விநாயகருக்கு மிகவும் உகந்த மாலையாக கருதப்படும் எருக்கம்பூவால் ஆன மாலையை அணிவிக்க வேண்டும். விநாயகருக்கு உகந்த அருகம்புல்லை அவருக்கு சூட்டுவதும் சிறந்த நற்பலன்களை கொடுக்கும்.

பிறகு மாலை அணிவித்து, படையலிட்ட பின்பு தீபாராதனை காட்டி விநாயகரை மனதார வழிபட்டு விநாயகருக்கு படைத்த பிரசாதத்தை வீட்டில் உள்ளவர்கள் மட்டும்சாப்பிடாமல் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு வழங்கி சாப்பிட விநாயகர் அருள் பரிபூரணமாக கிடைக்கும் .

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 81100 31302
WhatsApp
bakthi@ibctamil.com
Email US