சனிபகவான் தாக்கம் குறைய திருநள்ளாறில் இந்த முறையில் பரிகாரம் செய்யுங்கள்
ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகமாக சனி பகவான் இருக்கிறார். காரணம் சனி பகவான் தான் மிகவும் மெதுவாக நகரக் கூடியவர். சுமார் 2 அரை ஆண்டுகள் ஒரு ராசியில் சஞ்சரிக்கிறார். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் மாறுகிறார்.
இந்த மாற்றம் கட்டாயம் மிகப்பெரிய அளவில் தனிநபர் வாழ்க்கையில் அவர்களின் ஜாதகத்தை அமைப்பு கொண்டு தாக்கத்தை உண்டு செய்யும். மேலும் இந்த சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனி பகவானுக்குரிய பிரதான பரிகார தலமாக விளங்கக்கூடியது திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில். சனிப்பெயர்ச்சி முன்னிட்டு இங்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறும்.

திருநள்ளாறு தல வரலாறு :
மகாபாரதத்தில் வரும் நிடத நாட்டு மன்னன் நளன் சேது நாட்டு இளவரசி தமயந்தியை திருமணம் செய்து கொண்டார். தேவர்கள் விரும்பிய தமயந்தி சுயம்வரத்தில் நளனை தேர்ந்தெடுத்ததால் சனி பகவான் மூலமாக நளன் கடுமையாக சோதிக்கப்பட்டார்.
ஒரு கட்டத்தில் அனைத்து செல்வங்களையும் இழந்து நின்றார். அவருடைய ராஜ்ஜியத்தை இழந்தார், மனைவியையும் பிரிந்து வாடினார், சேவைகளாக வாழ்ந்தார். இறுதியில் அனைத்தையும் மீண்டும் பெற்றாலும் மன அமைதி மட்டும் அவருக்கு கிடைக்கவில்லை.
அப்போது அவர் திருநள்ளாறு வந்து தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபாடு செய்தார், நளன்இங்கு வந்துகோவிலுக்குள் நுழைந்தவுடன் அவரை தொடர்ந்த சனி பகவான் ஆணைப்படி கோவிலுக்கு வெளியே நின்றார். அந்த நொடியே நலனின் மனம் தெளிவை தழுவி அமைதி பெற்றது.
அப்போது நளன் "இங்கு வந்து உன்னை வழிபாடு செய்பவர்களுக்கு எந்த ஒரு கெடுதலும் செய்யாமல் அருள் புரிய வேண்டும்" என வேண்டிக் கொண்டார். அதன்படி இறைவன் வரம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
இந்த தலத்தில் பிரம்மா இந்திரன், வருணன், அக்னி, எமன், நிருதி, வாயு, குபேரன், ஈசானன் என எட்டுத்திக்கும் பாலகர்களும் முனிவர்களும் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் இங்கு 17 சிவலிங்கங்களும் 13 தீர்த்தங்களும் உள்ளன.

பரிகாரங்கள்:
திருநள்ளாறு வரும் பக்தர்கள் முதலில் அங்கு இருக்கக்கூடிய நள தீர்த்தத்தில் நீராட வேண்டும். குலத்தை வல இடமாக சுற்றி வணங்கி வர வேண்டும். நடுவே உள்ள நளன் தமயந்தி சிலைகளை நன்றாக தரிசனம் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் கோவிலுக்குள் சென்று சுவர்ண கணபதி, முருகன், தர்ப்பாரண்யேஸ்வரர், தியாகேஸ்வரர், பிராணேஸ்வரி இவர்களை தரிசித்து கடைசியாக சனிபகவானை வணங்க வேண்டும். மேலும் சனி தோஷங்கள், ஜென்ம சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி, அர்த்த அஷ்டம சனி, கண்ட சனி எதுவாக இருந்தாலும் இங்கு வந்து பரிகாரம் செய்தால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
அதாவது எள் தீபம் ஏற்றுதல், கருங்குவளை மலர் அர்ப்பணம், நல்லெண்ணெய் அபிஷேகம், கருப்பு வஸ்திரம் சமர்ப்பித்தல், வடமாலை சாற்றுதல், எள் சாதம் நெய்வேத்தியம் செய்தல் ஆகியவை இங்கு பரிகாரமாக செய்யப்படுகிறது. சனிக்கிழமை மட்டுமின்றி வாரத்தின் எந்த நாளிலும் சனி ஹோரை நேரத்தில் இங்கு வந்து வழிபாடு செய்தால் சிறப்பை பெற்றுக் கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |