இறந்த ஆன்மா உங்களிடம் பேச துடிப்பதற்கான 5 அறிகுறிகள்

By Sakthi Raj Mar 01, 2026 04:16 AM GMT
Report

இந்த உலகம் ஒரு விசித்திரமானது. எங்கே எது தொடங்கும்? எங்கே எது முடியும்? என்று யாராலும் கணிக்க முடியாது. மேலும், இந்த உலகத்தில் வாழக்கூடிய அத்தனை உயிர்களும் ஒரு நாள் மரணித்தாக வேண்டும் என்பதுதான் நியதியாக உள்ளது.

ஆனால் இறக்கின்ற அத்தனை உயிரும் செல்கின்ற இடம் இன்று வரை யாரும் அறியவில்லை. ஆக, இந்த உலகம் பல நேரங்களில் பதிலற்றதாக தான் இருக்கிறது. அதில் சில நேரங்களில் நாம் சில அமானுஷ்யங்கள் நம்மை சுற்றி நடப்பதையும் நாம் காண முடியும். என்னதான் அதை நாம் நம்ப முடியாத நிலை இருந்தாலும்.

சில நிகழ்வுகள் அதை நாம் நம்பி தான் ஆக வேண்டும் என்று நமக்கு வற்புறுத்துகிறது. அப்படியாக நம்முடன் வாழ்ந்தவர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய ஆன்மா நம்மிடம் பேசுவதற்காக முயற்சி செய்யும் என்று சொல்லப்படுகிறது.

இறந்த ஆன்மா உங்களிடம் பேச துடிப்பதற்கான 5 அறிகுறிகள் | How To Know Some Spirit Is Guidiing You

கேட்டதை அருளும் ததாஸ்து தேவர்கள்.. இவர்கள் யார் தெரியுமா?

கேட்டதை அருளும் ததாஸ்து தேவர்கள்.. இவர்கள் யார் தெரியுமா?

அப்படியாக இறந்த ஆன்மா நம்மை நெருங்கவும் நம்மிடம் பேசுவதற்காக எடுக்கும் முயற்சிகளை நாம் சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம் என்கின்றார்கள். அதை பற்றி பார்ப்போம்.

1. நாம் ஓரிடத்தில் அமர்ந்திருக்கும் பொழுது திடீரென்று அங்கு இருக்கக்கூடிய வெப்பநிலை மாறுபடும். காரணமே இல்லாமல் ஒரு குளிர்ந்த தன்மையை உணர்வோம். இவ்வாறு மாறும்பொழுது இறந்த ஆன்மா உங்களிடம் ஏதோ பேச வருவதற்கான முதல் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

2. நீங்கள் வாழ்க்கையில் முக்கியமான முடிவுகள் எடுக்கும் பொழுது உங்களை யாரோ வழி நடத்துவது போல் இருக்கும். அது மட்டும் அல்லாமல் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய எந்த நிகழ்வையும் உங்களால் முன்னதாகவே அறியக்கூடிய தன்மையை நீங்கள் பெறுவீர்கள்.

உங்களுக்கு தீயது நடக்கப்போகிறது என்றால் அதிலிருந்து நீங்கள் நொடி பொழுது தப்பித்து இருப்பீர்கள். அப்பொழுது ஏதோ ஒரு ஆன்மாவும் உங்களை காப்பாற்றியது போல் நீங்கள் மிக ஆழமாக உணரலாம்.

இறந்த ஆன்மா உங்களிடம் பேச துடிப்பதற்கான 5 அறிகுறிகள் | How To Know Some Spirit Is Guidiing You

இந்த ராசியில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாம்.. உங்கள் ராசி உள்ளதா?

இந்த ராசியில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாம்.. உங்கள் ராசி உள்ளதா?

3. உங்கள் கனவுகள் வழியாக ஆன்மா உங்களிடம் பேச முயற்சி செய்யும். ஒரே மாதிரியான சின்னம் தொடர்புடைய கனவுகளை நீங்கள் காண்பீர்கள்.

4. உங்களுடைய உணர்வுத் திறன் அதிகமாகும். உங்களை சுற்றி எத்தனை நபர் இருந்தாலும் உங்களுடைய பார்வை தெளிவானதாக மாறும். நன்மை தீமை வரும் முன் நீங்கள் அதை அறிந்து கொள்வீர்கள். அதை போல் ஒரு இடத்தில் நல்ல நறுமணம், கெட்ட நறுமணம் இருப்பதையும் உங்களால் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.

5. அதேபோல் கடிகாரத்தில் நீங்கள் ஒரே மணித்துளியை அடிக்கடி பார்க்க நேரும். உதாரணமாக 3.45 என்கின்ற மணியை நீங்கள் தொடர்ந்து எதிர்பாராத நேரங்களில் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள்.

ஆக, இவ்வாறான விஷயங்கள் நம்மை சுற்றி நடக்கும்பொழுது ஒரு ஆன்மா நம்மிடம் ஏதோ பேச துடிப்பதற்கான ஒரு அறிகுறியை கொடுக்கிறது. இதற்கு கட்டாயமாக நாம் பயம் கொள்ள தேவையில்லை. அதை கவனமாக கவனித்துப் பார்த்தால் பல நேரங்களில் அவை நமக்கு நன்மை செய்யத்தான் நம்மை சுற்றி இருக்கும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US