வரலட்சுமி விரதம்.., வீட்டில் கலசம் அமைக்கும் சரியான முறை
வரலட்சுமி என்றால் வரம் தரும் தெய்வம் என்று பொருள். சுமங்கலி பெண்கள் அதிகம் வரலட்சுமி விரதம் இருப்பார்கள்.
அதன்படி 2024 ஆண்டிற்கான வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 16ஆம் திகதி அதாவது நாளை கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத்தில் பவுர்ணமி அல்லது பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை கொண்டாடப்படுகிறது.
சுமங்கலி பெண்கள் விரதம் இருந்தால், கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும், மேலும் பொருளாதார ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அந்தவகையில், வரலட்சுமி விரதத்தின் போது பயன்படுத்தப்படும் கலசத்தை அமைப்பது பற்றி தெரிந்துகொள்வோம்.
கலசத்தை அமைப்பது எப்படி?
திருமணமான பெண்கள் ஒரு நாள் முன்பே பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீராடி விட்டு, பின் பூஜை செய்யும் இடத்தை மா கோலத்தால் அலங்கரிக்கவும்.
பின் வீட்டில் வெள்ளை அழுது வெண்கல கலசம் இருந்தால் அதை எடுத்துக் கொள்ளவும். பின் பூஜை அறையில் ஸ்வஸ்திக் சின்னம் வரையவும்.
இப்போது கலசத்தில் ஐந்து வகையான இலைகள், சுத்தமான தண்ணீர், நாணயங்கள், பச்சரிசி, வெற்றிலை பாக்கு ஆகியவற்றை போட வேண்டும்.
மேலும், கண்ணாடி, மஞ்சள், கருப்பு மணிகள், சீப்பு, சிறிய கருப்பு வளையல்கள் போன்ற பொருட்களையும் வைக்கவும்.
பின் கலசத்தின் கழுத்து பகுதியை ஒரு பட்டு துணியால் சுற்றி மா இலைகள், அழகான ரோஜா மாலை கொண்டு அலங்கரிக்கவும்.
அடுத்து ஒரு தேங்காய் எடுத்து அதன் முழுவதும் மஞ்சள் தடவவும். இந்த கலசத்தில் லட்சுமி தேவி குடியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே, கலசத்திற்கும் ஆரத்தி எடுக்கவும்.
வரலட்சுமி பூஜை முடிந்ததும் அடுத்த நாள் சனிக்கிழமை என்பதால் அந்நாளில் கலசத்தில் இருக்கும் நீரை வீட்டில் இருக்கும் அனைத்து இடங்களிலும் தெளிக்க வேண்டும்.
இந்த நீர் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நேர்மறை ஆற்றலை வழங்கும் என்று சொல்லப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |