சனிபகவானை வழிபடும் போது மறந்தும் கூட இப்படி செய்து விடாதீர்கள்

Report

வழக்கமாக நாம் வணங்கும் கடவுள் போல் அல்லாமல் இன்பம் துன்பம் இரண்டையும் சரிக்கு சமம் கொடுக்கும் ஆற்றல் சனி பகவானுக்கு மாத்திரமே உள்ளது.

குறிப்பிட்ட சிலரின் வாழ்க்கையில் சோதனைகளின் வழியாக மேம்படுத்துவார். அதே சமயம் கருணையுள்ள கிரகமாகக் கருதப்படுகிறார்.

சனி தேவன் உங்களுக்கு ஒத்துப் போக, அவரது அருள் பெற சில சிறந்த வழிபாடுகள், முறைகள் மற்றும் பரிகாரங்கள் உள்ளன. அவற்றை பின்பற்றும் பொழுது சிறந்த பலனை பெறலாம்.

அந்த வகையில் சனி பகவானை வழிபடும் பொழுது என்னென்ன விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதனை பதிவில் பார்க்கலாம். 

வழிபாட்டு முறை

சனிபகவானை வழிபடும் போது மறந்தும் கூட இப்படி செய்து விடாதீர்கள் | How To Please Lord Shani

1. முதுகை காட்டக் கூடாது

சனியை வழிபடும் போது மெதுவாக நகர்ந்து கொண்டேதான் வழிபட வேண்டும். ஒரே இடத்தில் வெகுநேரம் நின்று வழிபடுவது கூடாது. அதே போன்று சனிபகவானை வணங்கிவிட்டு வரும்போது முதுகை காட்டிக் கொண்டு வரக்கூடாது. இந்த செயல் அவரை அவமதிப்பது போன்று இருக்கும். அதனால் சில அடிகள் பின்னால் வந்து அதற்குப் பிறகுதான் திரும்ப வேண்டும். இப்படி வழிபடும் பக்தர்களுக்கு சனிபகவானின் கருணையை கிடைக்கும்.

சனிபகவானை வழிபடும் போது மறந்தும் கூட இப்படி செய்து விடாதீர்கள் | How To Please Lord Shani

2. எண்ணெய் கொடுக்கும் முறை

சனிபகவான் கோவிலுக்கு எண்ணெய் வாங்கிக் கொடுக்கும் போது இரும்புப் பாத்திரத்தில் தான் கொடுக்க வேண்டும். அதனை தவிர்த்து செம்பு போன்ற மற்ற உலோகங்கள் மற்றும் பாக்கெட்டுகளில் கொடுப்பது மற்ற கடவுள்களுக்கு படைப்பது போன்று ஆகி விடும். ஏனெனின் செம்பு சூரிய பகவானுக்குரியதாகும். சனியும் சூரியனும் எதிர் கிரகங்கள் என்பதால் செம்பு பாத்திரத்தில் எண்ணெய் கொடுக்கும் பொழுது சனி பகவானை அவமதிப்பது போன்று நினைத்துக் கொள்வார். 

சனிபகவானை வழிபடும் போது மறந்தும் கூட இப்படி செய்து விடாதீர்கள் | How To Please Lord Shani

3. நேருக்கு நேராக வழிபடக் கூடாது.

சனி பகவானை வழிபடும் போது நேருக்கு நேர் நின்று வழிபடக் கூடாது. மாறாக சனிபகவானை விழுந்து கும்பிட்டு வணங்கக் கூடாது. சனிபகவானுக்குப் பக்கவாட்டில் நின்று கண்களை மூடி அவரது பாதத்தை நினைத்து தான் வணங்க வேண்டும். சனிபகவானின் பார்வை நேரடியாக நம் மீது படும் வகையில் நின்று வழிபட்டால் கஷ்டங்களும், தீய விஷயங்களும் நம்மை சூழ்ந்துக் கொள்ளும்.

சனிபகவானை வழிபடும் போது மறந்தும் கூட இப்படி செய்து விடாதீர்கள் | How To Please Lord Shani

4. பிடிக்காத நிறம்

சிவப்பு நிறம் சனி பகவானுக்கு பிடிக்காது. இந்த நிறத்தில் ஆடை அணிந்து வந்து வழிப்பட்டால் அவருக்கு கோபம் வரும். மாறாக அவருக்கு பிடித்த நிறம் கருப்பு என்பதால் அதனுடன் தொடர்புடைய நிறங்களில் ஆடை அணியலாம்.

சனிபகவானை வழிபடும் போது மறந்தும் கூட இப்படி செய்து விடாதீர்கள் | How To Please Lord Shani

5. நிற்கக் கூடாத திசைகள்

சனி பகவானை வழிபாடும் பொழுது கிழக்கு நோக்கி தான் நிற்க வேண்டும். சனி பகவான் மேற்கு திசைக்கு உரியவர் என்பதால் மேற்கு நோக்கி நின்றுதான் வழிபட வேண்டும். மேற்கு திசையில் நின்று வழிபட்டால் சனி பகவான் அருள் கிடைக்கும். சனி பகவானை வழிபடுவதற்கு ஏற்ற திசையாக மேற்கு திசையாகும். 

சனிபகவானை வழிபடும் போது மறந்தும் கூட இப்படி செய்து விடாதீர்கள் | How To Please Lord Shani

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US