ஜோதிடம்: உடலில் இந்த இடங்களில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் உங்களை தேடி வருமாம்
நம் உடல்களில் பிறக்கும் பொழுதே இயற்கையாக மச்சம் இருப்பதை நாம் கவனிக்க முடியும். அப்படியாக, ஜோதிடத்தில் மச்சம் இருக்கும் இடம் வைத்தும் ஒருவருடைய குணங்கள் கணித்து சொல்லப்படுகிறது.
அப்படியாக, நம் உடல்களில் எங்கெல்லாம் மச்சம் இருந்தால் நமக்கு அதிர்ஷ்டம் கிடைக்கிறது என்று பார்ப்போம்.
ஒருவருக்கு நெற்றியில் மச்சம் இருந்தால், அவர்கள் மிக பெரிய புத்திசாலியாக இருப்பார்கள். வாழ்க்கையில் அறிவை கொண்டு பணம் சம்பாதிப்பார்கள். அதே போல் ஒருவருக்கு உள்ளங்கையில் மச்சம் இருந்தால், அவர்களுக்கு செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
பணத்தை சேமிப்பதில் திறமைசாலியாக இருப்பார்கள். சிலருக்கு பாதங்களில் மச்சம் இருக்கும். அவ்வாறு இருந்தால் அவர்கள் வாழ்க்கை பயணம் மிக சுவாரசியமாக அமையும். மற்றவர்ளை வழிநடத்தும் வாய்ப்புகள் கிடைக்கும்.
காதில் மச்சம் கொண்டு இருப்பவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் தேடி வரும். இவர்கள் பிறர் மனம் புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். தோள்பட்டையில் மச்சம் இருந்தால் மிகவும் பொறுப்புள்ள நபராக இருப்பார்கள்.
அதே போல் கடின உழைப்பை கொண்டு சம்பாதிக்கும் திறன் படைத்தவர்களாக இருப்பார்கள். முதுகில் மச்சம் இருப்பவர்கள் மிகவும் நேர்மையானவர்களாக இருப்பார்கள். பிறர் நம்பும் மனிதராக திகழ்வார்கள்.
கழுத்தில் மச்சம் கொண்டவர்களுக்கு எப்பொழுதும் ஒரு சிலரின் உதவிகள் கிடைத்து கொண்டு இருக்கும். இவர்களுக்கு வாழ்க்கை மிக பெரிய அதிசயமும் வாய்ப்புகளையும் கொடுக்கும். கன்னத்தில் மச்சம் இருப்பவர்கள் உறுதியான மனதுடன் இருப்பார்கள்.
இவர்கள் இருக்கும் இடம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். புருவத்தில் மச்சம் இருந்தால் காதல் மற்றும் பணத்தில் அதிர்ஷ்டம் தேடி வரும். நட்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். நண்பர்கள் எப்பொழுதும் துணையாக இருப்பதால் வெற்றிகள் இவர்களை தேடி வரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |