பகவத் கீதை படித்தால் புரியவில்லையா? செய்யவேண்டிய எளிய பரிகாரம்
பகவத் கீதை என்பது நம்முடைய வாழ்க்கையை போதிக்கும் மிக பெரிய பாடம் ஆகும். மனிதன் எப்படி எல்லாம் வாழவேண்டும்? எப்படி எல்லாம் வாழ கூடாது என்பதற்கு கீதை மிக பெரிய பாடம் ஆகும். மேலும்,பகவத் கீதை படிப்பவரக்ளுக்கு இறைவன் அருளால் மிக பெரிய புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை.
அப்படியாக, பலருக்கும் பகவத் கீதை படிப்பதில் சில சிரமங்கள் உண்டாகும். அவ்வாறு பகவத் கீதை படிக்க முடியாதவர்கள் இந்த ஒரு எளிய ஸ்லோகம் சொல்ல, அவர்களுக்கு பகவத் கீதையை படித்ததின் முழு பலன் கிடைக்கும்.
''மமை வாம்ஸோ ஜீவலோக ஜீவபூத ஸனாதனா' என்பதே அந்த ஸ்லோகம்.இதன் பொருள், எல்லாம் கிருஷ்ணரின் வழி என்று உணர்வோம். உலகில் பிறந்த அனைத்து உயிரிகளிடத்தில் அன்பும் கருணையும் உண்டாகும். உலகமே கண்ணன் என்ற மனநிலை உண்டாகும்.
'உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே' என நம்மாழ்வார் பாடிய மனநிலை வந்து விடும். அதோடு கீதையை படித்த முழு பலன் நாம் பெற முடியும். மேலும், உங்களுக்கு துன்பம் வரும் பொழுது செய்வதறியாது தவிக்கும் பொழுது மனதில் இதை சொல்லிக்கொள்ளுங்கள்.
எல்லாம் அவனுடையது, இன்பம் துன்பம் அவமானம் தோல்வி வெற்றி இவை எல்லாம் கிருஷ்ணரையே சேரட்டும் என்று மனதில் சொல்லிக்கொள்ளுங்கள் பயம் விலகும். மனதில் பக்தி அதிகரிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |