தொடர்ந்து கஷ்டம் வருகிறதா?அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்
வாழ்க்கை அது வெறும் வெள்ளை தாள் போல் எதுவும் எழுத்திடாமல் இருந்தால் இருண்டு போய் இருக்கும்.இன்பம் துன்பம் என மாறி மாறி வந்தால் தான் பிறந்த பயனை அடைய முடியும்.
அப்படியாக பிறந்த அனைவரும் எந்த ஒரு துன்பத்தையும் சந்திக்கமால் காலம் கடந்திட முடியாது.அதற்கு உதாரணமாக கற்பு கரசியான சீதை எடுத்து கொள்ளுவோம் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்காத துன்பமா நம் வாழ்க்கையில் சந்தித்து விட போகின்றோம்.
அதாவது சீதை ராமன் கிடைப்பானா என்று கலங்கிய காலம் கடந்து பிறகு ராமபிரான் திருமணம் செய்த பிறகும் காடு சென்று கலக்கம் கொண்டு அங்கேயும் நிம்மதி இல்லாமல் காட்டிலிருந்து சீதை கடத்தப்பட்டு,பிறகு ராமன் வந்து தன்னை மீட்டு கொண்டுசெல்வரா மாட்டாரா என்று அதிகம் கலங்கி.
அத்தனை இன்னலைகளை தாண்டி தன்னை மீட்ட ராமனே தன்னை சந்தேகம் கொண்டார் அங்கும் ஒரு துன்பம் மன வேதனை என்று இப்படி சீதையின் வாழ்க்கையிலே ஒருசுவடுக்கு மறுசுவடு துன்பம் என்றால், நம் நிலையெல்லாம் என்ன?
எல்லோருக்கும் துன்பம் வருவது இயல்பு அதில் தான் வாழ்க்கை சுவை நிறைந்து இருக்கிறது.எல்லாம் கற்று கொள்ளவும் ஏற்று கொள்ளவும் கடினம் தான் ஆதலால் "எல்லா துன்பத்துக்கும் ஒற்றைப் பரிகாரம் மனதை ஞானத்தண்ணீரில் முக்கி எடுப்பதே".
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |