மகாசிவராத்திரியில் 12 ராசிகளும் சிவபெருமானுக்கு செய்யவேண்டிய அபிஷேகம் பொருட்கள்

By Sakthi Raj Feb 26, 2025 09:30 AM GMT
Report

இறைவழிபாட்டில் மிக முக்கியமானதாக அபிஷேகம் அமைய பெற்று இருக்கிறது.அதாவது நம்முடைய துன்பங்கள் விலக இறைவனுக்கு அபிஷேகம் செய்வதால் நம் பல மாற்றங்களை பெறலாம்.ஏன்,அதனால் நம்முடைய பல கர்ம வினைகள் விலகுகிறது.

மேலும்,இறைவனுக்கு செய்யும் அபிஷேகத்தை கண்குளிர காண நம்முடைய இன்னல்கள் வந்த வழி தெரியாமல் போவதை காணமுடியும்.அப்படியாக சிவபெருமானின் முக்கிய நாளான மகாசிவராத்திரி அன்று 12 ராசிகளும் சிவபெருமானுக்கு செய்யவேண்டிய அபிஷேக பொருட்கள் பற்றி பார்ப்போம்.

மகாசிவராத்திரியில் 12 ராசிகளும் சிவபெருமானுக்கு செய்யவேண்டிய அபிஷேகம் பொருட்கள் | Importance Of Abishegam On Maha Sivarathiri

மேஷம்

வெல்லம் கலந்த நீர் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

ரிஷபம்

இந்த இராசிக்காரர்கள் தயிர் கொண்டு அபிஷேகம் செய்தால் பணப் பிரச்சனைகள் நீங்கும்.

மிதுனம்

சிவ லிங்கத்திற்கு கரும்பு சாறு கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

கடகம்

சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மந்தாரைப் பூ கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.

சிம்மம்

பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். கன்னி இந்த இராசிக்காரர்கள் பால் அல்லது நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

இன்று சிவராத்திரி அன்று அனைவரும் சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த 7 சிவ மந்திரம்

இன்று சிவராத்திரி அன்று அனைவரும் சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த 7 சிவ மந்திரம்

துலாம்

பசும் பாலால் இந்த இராசிக்காரர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். விருச்சிகம் இந்த இராசிக்காரர்கள் தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் அபிஷேகம் செய்யலாம்.

தனுசு

இந்த இராசிக்காரர்கள் குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும். மகரம் இந்த இராசிக்காரர்கள் சிவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வில்வம் பழத்தை படைக்க வேண்டும்.

கும்பம்

இளநீர் அல்லது கடுகு எண்ணெயால் இந்த இராசிக்காரர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

மீனம்

குங்குமப்பூ பாலால் இந்த இராசிக்காரர்கள் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

மேல் காணும் அபிஷேக பொருட்கள் கொண்டு குறிப்பிட்ட ராசியினர் அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய அவர்கள் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை காணமுடியும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US