தியானம் செய்ததால் 5 விஷயங்களை இழந்த புத்தர்

By Sakthi Raj Jan 23, 2025 08:33 AM GMT
Report

மனிதன் அவன் வாழ்க்கையில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று தியானம்.காரணம் அவன் வாழ்க்கைக்காக ஓடும் ஓட்டத்திற்கு உண்மையில் கொஞ்சம் அமைதியும் நிதானமும் மிக அவசியமாக தேவை படுகிறது.

அதற்காக அவன் யாரிடமும் பேசாமல் விலகி தனிமையில் சிறிது காலம் கழிக்க வேண்டும் என்பது இல்லை.தினமும் அவனுடன் அவனுக்காக சில மணித்துளிகளை செலவு செய்தாலே போதும்.அவ்வாறு செய்வதால் அவனுக்கு என்ன கிடைத்திவிட போகிறது என்று தான் பலரும் நினைக்கிறார்கள்.

தியானம் செய்ததால் 5 விஷயங்களை இழந்த புத்தர் | Importance Of Meditation By Buddhar

அப்படித்தான் ஒரு முறை ஒரு சீடர் புத்தரிடம் கேட்கிறார்?நீங்கள் தினமும் தியானம் செய்கிறீர்கள்.இதனால் நீங்கள் என்ன பெற்றீர்கள்?என்று அவர் கேட்டார். அதற்கு புத்தர் ஆம்!நீங்கள் கேட்டது சரி தான்.

தியானம் செய்வதால் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை.ஆனால் சில விஷயங்களை இழந்திருக்கிறேன் என்றார்.அதாவது தியானம் செய்ததால் மனித பிறவிக்கே இருக்க கூடாத குணமான கோபம்,பதட்டம்,மரண பயம்,பொறாமை இப்படி நிறைய இழந்திருக்கிறேன் என்று பொறுமையாக பதில் அளித்தார் புத்தர்.

பிறவி பிணியை போக்கும் சக்தி வாய்ந்த அபிராமி அந்தாதி பதிகம்

பிறவி பிணியை போக்கும் சக்தி வாய்ந்த அபிராமி அந்தாதி பதிகம்

இது தான் தியானத்தின் மிக பெரிய சக்தி.ஒரு மனிதனை முழுமையடைய செய்யக்கூடிய தன்மை கொண்டது தியானம்.இந்த தியானத்தால் அவன் அவனையே வெல்லலாம்.

தியானம் செய்ததால் 5 விஷயங்களை இழந்த புத்தர் | Importance Of Meditation By Buddhar

எதையும் சாதிக்கலாம்.ஆதலால் தான் ஆன்மீகத்தில் தியானத்திற்கு மிக பெரிய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

தியானம் செய்து இறைவனை அடைந்தவர்கள் பலர்.தியானம் செய்து அவர்கள் அறியாமையை விலக்கியவர்கள் கோடி என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆக நாமும் பதட்டத்துடன் ஓய்வின்றி ஓடும் இந்த வாழ்க்கையில் கொஞ்சம் அமர்ந்து கண்களை முடி தியானம் செய்ய பழகி அகக்கண்களை திறப்போம்.அவை நம்முடைய ஆன்மாவிற்கு செய்யும் மிக பெரிய புண்ணியம் ஆகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US